அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

வேளாண் கழிவுகளிலிருந்து 'பயோ-பிட்டுமன்' தயாரிக்கும் புதிய தொழில்நுட்பம் நாடாளுமன்றத்தில் தகவல்

இடுகை இடப்பட்ட நாள்: 04 FEB 2026 4:50PM by PIB Chennai

வேளாண் கழிவுகளிலிருந்து, குறிப்பாக நெல் வைக்கோலில் இருந்து உள்நாட்டிலேயே 'பயோ-பிட்டுமன்' (Bio-Bitumen) தயாரிக்கும் புதிய தொழில்நுட்பத்தை மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்)  உருவாக்கியுள்ளது. இது குறித்து மக்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் திரு. டாக்டர் ஜிதேந்திர சிங்  விரிவான பதிலளித்தார்.

மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் (சிஎஸ்ஐஆர் – சிஆர்ஆர்ஐ) மற்றும் இந்திய பெட்ரோலிய நிறுவனம் (சிஎஸ்ஐஆர் -ஐஐபி) ஆகியவை இணைந்து இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளன. இந்த முறையில் பயிர் எச்சங்கள் 'பைரோலிசிஸ்' என்ற செயல்முறை மூலம் உயிரி எண்ணெயாக மாற்றப்பட்டு, பின்னர் அவை சாலைகள் அமைக்கப் பயன்படும் பிட்டுமனாக மேம்படுத்தப்படுகின்றன. இந்த பயோ-பிட்டுமன், பெட்ரோலியம் சார்ந்த சாதாரண பிட்டுமனுக்குப் பதிலாக 30 சதவீதம் வரை பயன்படுத்தப்படலாம். இதன் மூலம் ஆண்டுக்குச் சுமார் 4,000 கோடி ரூபாய் வரையிலான அந்நியச் செலாவணி மிச்சமாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாடு பெருமளவு குறைக்கப்படும். விவசாயிகள் பயிர் எச்சங்களை வயல்களில் எரிப்பதைத் தவிர்த்து, அதை உற்பத்தித் தேவைகளுக்குப் பயன்படுத்துவதால் கார்பன் உமிழ்வு குறையும். மேலும், இது கிராமப்புறங்களில் புதிய வேலைவாய்ப்புகளையும், விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்தையும் உருவாக்கும். இந்தத் தொழில்நுட்பம் வணிக ரீதியான உற்பத்திக்காக ஏற்கனவே நாடு முழுவதும் உள்ள 14 தனியார் நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் இந்திய தர நிர்ணய அமைவனம்  ஆகியவற்றுடன் இணைந்து, இந்த பயோ-பிட்டுமன் சாலைகளுக்கான முறையான தரக் கட்டுப்பாட்டு விதிகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

***

(Release ID: 2223190)

TV/VK/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2223506) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी