பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய கடற்படையின் பயிற்சி பாய்மரக் கப்பல் ஐஎன்எஸ் சுதர்ஷினி, ‘லோகாயன் 26’ பயணத்தின் முதல் கட்டமாக ஓமன் நாட்டின் சலாலா துறைமுகத்தை அடைந்தது

இடுகை இடப்பட்ட நாள்: 04 FEB 2026 4:56PM by PIB Chennai

இந்திய கடற்படையின் பாய்மரப் பயிற்சி கப்பலான ஐஎன்எஸ் சுதர்ஷினி, தனது ‘லோகாயன் 26’- சர்வதேச பயணத்தின் முதல் கட்டமாக பிப்ரவரி 2 அன்று ஓமன் நாட்டின் சலாலா துறைமுகத்தைச் சென்றடைந்தது. இந்தப் பயணம்,  இந்தியாவின் வளமான கடல் மரபை உலகிற்கு வெளிப்படுத்துவதையும், சர்வதேச கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டதாகும்.  இது கப்பலின் பத்து மாத காலப் பயணத்தின் முக்கியமான ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது.

ஐஎன்எஸ் சுதர்ஷினி, ஜனவரி 20 அன்று தனது தாய்துறைமுகமான கொச்சியிலிருந்து புறப்பட்டு, அரபிக் கடலின் பருவகால காற்றோட்டங்களை கடந்து, பயணத்தின் முதல் கட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது.  இந்தியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கிடையேயான ஆழமான கடல்சார் உறவுகளையும், உத்திசார் கூட்டாண்மையையும் இது வலியுறுத்துகிறது. இந்த பயணத்தின் போது ஓமன் கடற்படையுடன் பல்வேறு தொழில்முறை கலந்துரையாடல்கள் மற்றும் பயிற்சி நடவடிக்கைகளில் அது ஈடுபடும்.  மேலும், கடல்சார் விழிப்புணர்வையும் மக்கள்-மக்கள் தொடர்பையும் மேம்படுத்தும் நோக்கில், பள்ளி மாணவர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் கப்பலை பார்வையிட அனுமதி வழங்கப்படும்.

‘லோகாயன் 26’ எனும் இந்தத் தொடர்ச்சியான பயணம், இந்தியாவின் கடற்பயண மரபின் சின்னமாகவும், கடல்சார் தூதரகம், நல்லிணக்கம் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பு ஆகியவற்றில் இந்திய கடற்படையின் நிலைத்த உறுதியை பிரதிபலிப்பதாகவும் இருக்கும்.

***

(Release ID: 2223195)

TV/PKV/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2223468) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी