உள்துறை அமைச்சகம்
இந்தியாவில் உள்ள எதிரி சொத்துக்களை பணமாக்கும் நடவடிக்கைகள்
இடுகை இடப்பட்ட நாள்:
04 FEB 2026 3:50PM by PIB Chennai
எதிரி சொத்துக்கள் சட்டம் 1968 மற்றும் அது சார்ந்த விதிமுறைகள் மற்றும் வழிகாட்டும் நெறிமுறைகள்படி எதிரி சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலம் பணமாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்தகைய சொத்துக்களை விற்பனை செய்வதற்கு முன்னதாக மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மதிப்பீட்டுக் குழுவால் எதிரிகளுக்குச் சொந்தமான அசையா சொத்துக்கள் மதிப்பீடு செய்யப்படும். இத்தகைய சொத்துக்களின் மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கும் கூடுதலாக இருந்தால் அதன் சந்தை மதிப்பீட்டு நடவடிக்கைகளை அதற்கான மதிப்பீட்டுக் குழுவின் மூலம் மேற்கொள்ளப்படும்.
சொத்து விற்பனை செய்வதற்கான குழுவிற்கு அனுப்புவதற்கு முன்பு அது தொடர்பான தகவல்கள் இந்தியாவில் உள்ள எதிரி சொத்துக்கள் பாதுகாப்பாளரிடம் தெரிவிக்கப்படும். 2026 ஜனவரி 28 அன்று வரை 2,930 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தியாவில் உள்ள எதிரிகளின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் மத்திய உள்துறை இணையமைச்சர் திரு பண்டி சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.
***
(Release ID: 2223090)
TV/SV/KPG/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2223395)
வருகையாளர் எண்ணிக்கை : 8