அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் புகலிடமான காசிரங்கா: புதிய ஆய்வின் சுவாரசியமான தகவல்கள்

இடுகை இடப்பட்ட நாள்: 03 FEB 2026 5:13PM by PIB Chennai

அசாமின் காசிரங்கா தேசிய பூங்காவில் உள்ள சதுப்பு நிலங்களுக்கு அடியில் கண்டெடுக்கப்பட்ட படிமங்கள், ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் வாழ்விடம் காலப்போக்கில் சந்தித்த மாற்றங்கள் குறித்த பல சுவாரசியமான தகவல்கள் கிடைத்துள்ளன.

 

 காலநிலை மாற்றம், தாவரங்களின் வளர்ச்சி மாற்றங்கள் மற்றும் விலங்குகளின் செயல்பாடுகள் ஆகியவை காண்டாமிருகங்களின் உயிர்வாழ்வில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தின என்பது குறித்து பீர்பால் சாஹ்னி தொல் அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் விரிவான ஆய்வு மேற்கொண்டனர்.

 

சுமார் 3,300 ஆண்டுகளுக்கு முந்தைய தரவுகளை ஆய்வு செய்ததில், கடந்த காலங்களில் வடமேற்கு இந்தியா முழுவதும் பரவி இருந்த காண்டாமிருகங்கள், பிற்காலத்தில் அங்கு ஏற்பட்ட தீவிர காலநிலை மாற்றங்கள் மற்றும் அதிகரித்த மனித வேட்டையாடுதல் காரணமாக மெல்ல மெல்ல அழியத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, 'லிட்டில் ஐஸ் ஏஜ்' எனப்படும் பனிக்காலத்தின் போது ஏற்பட்ட தட்பவெப்ப மாறுபாடுகள் அவற்றின் வாழ்விடத்தை முற்றிலுமாகச் சிதைத்தன.

 

அதே நேரத்தில், வடகிழக்கு இந்தியப் பகுதியானது தட்பவெப்ப நிலையில் பெரிய மாற்றங்கள் ஏதுமின்றி நிலையாக இருந்துள்ளது. இதனால் பாதுகாப்பான சூழலைத் தேடி காண்டாமிருகங்கள் கிழக்கு நோக்கி இடம்பெயர்ந்து, இறுதியில் காசிரங்காவைத் தங்கள் நிரந்தரப் புகலிடமாகக் கொண்டுள்ளன. காசிரங்காவின் சதுப்பு நிலங்களுக்கு அடியில் ஒரு மீட்டர் ஆழத்தில் எடுக்கப்பட்ட மண் அடுக்குகளில் இருந்த தாவர மகரந்தங்கள் மற்றும் விலங்குகளின் கழிவுகளில் வளர்ந்த பூஞ்சைகள் இதற்குச் சான்றாக அமைந்துள்ளன. கடந்த காலத்தின் இந்தச் சூழலியல் மாற்றங்களைப் புரிந்துகொள்வது, எதிர்கால காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்கும், சிறந்த வன மேலாண்மைக்கும் ஒரு முக்கிய வழிகாட்டியாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2222633&reg=3&lang=1

வெளியிட்டு எண்: 2222633

****

TV/VK/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2222884) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी