PIB Headquarters
azadi ka amrit mahotsav

சௌபாக்யா திட்டதின் கீழ் நாடு முழுவதும் 100% வீட்டு மின்மயமாக்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 02 FEB 2026 2:26PM by PIB Chennai

2026-27-க்கான மத்திய அரசின் பட்ஜெட்டில் உயிரி மருத்துவம் மற்றும் உயிரி மருந்துகளை மத்திய அரசு தனது மருத்துவப் பராமரிப்பு மற்றும் உற்பத்தி சார்ந்த உத்தியின் மையமாக வைத்துள்ளது. உயிரி மருந்து தொழில்துறையில் உலக அளவில் முன்னணி நாடாக இந்தியாவை மாற்றுவது, உலகளாவிய உயிரி மருந்துகள் சந்தையில் 5 சதவீதத்தை ஈர்ப்பது என்ற மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க இந்தப் பட்ஜெட் உள்ளது.

உயிரி மருந்து சக்தி என்ற இந்த தேசிய அளவிலான முன்முயற்சிக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ. 10,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உயிரி மருத்துவ சாதனங்கள் மற்றும் மருந்துகளின் உற்பத்தி மதிப்பை அதிகரிப்பது, இறக்குமதியை சார்ந்திருப்பதைக் குறைப்பது, உலகளாவிய உயிரியியல் வழங்கல் தொடரில் இந்தியாவின் போட்டித்தன்மையை விரிவுபடுத்துவது என்ற வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்காக பெரும் அளவிலான மருத்துவ ஆய்வு சூழல் அமைப்பை உருவாக்கவும், நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட ஆயிரம் மருத்துவப் பரிசோதனைக் கூடங்களை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் புதிய கண்டுபிடிப்புகளை விரைவுபடுத்த உதவும். 

அண்மை ஆண்டுகளில் பாரம்பரிய ரசாயன மருந்துகளுக்கு அப்பால் உயிரி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் மருந்துகள் அதிகரித்து வருகின்றன. இந்த வகையில், நவீன சுகாதாரப் பராமரிப்பில் உயிரி மருந்து முன்னணியில் உள்ளது. உயிரி மருந்துகள் என்பவை செல்கள், நுண்ணுயிரிகள் அல்லது இதர உயிரியல் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.   

தடுப்பூசிகள், நவீன உயிரியல் சிகிச்சை முறைகள் உள்ளிட்டவை உயிரி மருந்துகள் பிரிவில் விரிவாக பயன்படுத்தப்படுகின்றன. இவை பொது சுகாதார திட்டங்களிலும் மருத்துவப் பராமரிப்பில் குறிப்பாக, தொற்றுநோய்களில், பாரம்பரிய மருந்துகள் தீவிரமாக செயல்படாத முற்றிய நோய்கள் மற்றும் பாதிப்புகளில் உயிரி மருந்துகள், அவசியமானதாக மாறுகின்றன.

இந்தப் பின்னணியில் இந்தியாவில் தேசிய உயிரி மருந்து இயக்கம் 2017-ல் தொடங்கப்பட்டது. 2025-க்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் உயிரி தொழில்நுட்பத்துறையில் உலகளாவிய முதன்மை நாடாக இந்தியாவை மாற்றுவது இதன் நோக்கமாகும். ரூ.1,500 கோடி செலவிலான இந்தத் திட்டத்திற்கு உலக வங்கி நிதியுதவி அளித்தது. இதனை மத்திய உயிரி தொழில்நுட்பத்துறையின் கீழ் உள்ள உயிரித் தொழில்நுட்ப தொழில் ஆராய்ச்சி உதவி மன்றத்தால் இது அமலாக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2222079&reg=3&lang=1

***

TV/SMB/RJ/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2222369) வருகையாளர் எண்ணிக்கை : 51
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Gujarati