எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சௌபாக்யா திட்டதின் கீழ் நாடு முழுவதும் 100% வீட்டு மின்மயமாக்கல்

प्रविष्टि तिथि: 02 FEB 2026 5:36PM by PIB Chennai

நாடு முழுவதும் மின்சாரம் இல்லாத வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் நோக்கில், மத்திய அரசு 2017 அக்டோபரில் சௌபாக்யா திட்டத்தை தொடங்கியது.

இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 300 லட்சம் மின்சாரம் இல்லாத வீடுகள் கண்டறியப்பட்ட நிலையில், 286 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2019 மார்ச் 31க்கு முன் அடையாளம் காணப்பட்ட அனைத்து விருப்பமுள்ள வீடுகளுக்கும் 100% மின்மயமாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அனைத்து மாநிலங்களும் அறிக்கை அளித்துள்ளன.

இதனைத் தொடர்ந்து, மின்சார விநியோகத்தின் தரம் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில் மறுசீரமைக்கப்பட்ட மின்விநியோகத் துறை திட்டம்  செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ரூ 2.62 லட்சம் கோடி மதிப்பிலான பணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

இதில், ரூ 6,522 கோடி செலவில் 13.65 லட்சம் வீடுகளுக்கு மின்மயமாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் பழங்குடியினர், பட்டியல் இன மக்கள், தொலைதூர மற்றும் எல்லைப் பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில், சாத்தியமான இடங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த தகவலை மின்சாரத் துறை இணை அமைச்சர் திரு ஸ்ரீபத் நாயக், மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வ பதிலாக இன்று தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2222219&reg=3&lang=1

***

TV/PKV/RK


(रिलीज़ आईडी: 2222332) आगंतुक पटल : 64
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी