மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய பட்ஜெட்டில் கல்விக்கான ஒதுக்கீடுரூ 1,39,289.48 கோடி; இது முந்தைய ஆண்டைவிட 8.27 சதவிகிதம் அதிகமாகும்

प्रविष्टि तिथि: 01 FEB 2026 5:52PM by PIB Chennai

2026 – 27-ம் ஆண்டு பட்ஜெட் இளையோர் சக்திக்கான பட்ஜெட் என்று குறிப்பிட்டுள்ள மத்திய கல்வித்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், இது கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு ஊக்கமளித்து அடுத்த கட்ட வளர்ச்சிக்கான வரைவு செயல்திட்டத்தை இடம்பெறச் செய்துள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சகத்திற்கான மொத்த பட்ஜெட் ஒதுக்கீடு ரூ 1,39,289.48 கோடியாக உள்ளது என்றும், இது 2025 – 26-ம் ஆண்டு பட்ஜெட் ஒதுக்கீட்டை விட 8.27 சதவிகிதம் அதிகம் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

இளையோர், ஏழை மற்றும் நடுத்தர வகுப்பினர் உள்ளிட்ட அனைவரும் பயன்பெறும் வகையில் 2026 - 27-ம் பட்ஜெட்டை சமர்ப்பித்ததற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி, மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார். நிதியமைச்சர் சுட்டிக்காட்டிய மூன்று கடமைகள் தற்சார்பு இந்தியாவின் இலக்கை அடைவதற்கான இளையோர் திறனை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துவதாக அமைச்சர் கூறினார். உலகளவில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் சார்ந்த நிறுவனங்கள் மற்றும் படிப்புகளில் மாணவர்களின் பங்கேற்பு இந்தியாவில் அதிகம் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்தக் கல்வி நிலையங்களில் மாணவிகளின் சேர்க்கையை மேலும் அதிகப்படுத்துவதற்கு தேவை அடிப்படையிலான நிதியம் மற்றும் மூலதன ஆதரவு மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவிகளுக்கான ஒரு விடுதி அமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221734&reg=3&lang=1

***

SG/PKV/IR/RK/SH


(रिलीज़ आईडी: 2221909) आगंतुक पटल : 151
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Odia