மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
கால்நடை விவசாயிகளுக்கு கடன் உதவியுடன் கூடிய மானியத் திட்டங்கள் அறிவிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
01 FEB 2026 6:48PM by PIB Chennai
2026ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறைக்கு குறிப்பிடத்தக்க திட்டங்களை வழங்கியுள்ளது. இது கிராமப்புற வாழ்வாதாரங்களை வலுப்படுத்துவதற்கும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கும், கால்நடைப் பொருளாதாரத்தின் நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதற்குமான அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது. பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள், விவசாயிகளின் சொத்துக்களைப் பாதுகாக்கவும், தரமான கால்நடை உற்பத்தியை உறுதி செய்யவும், கால்நடை இன மேம்பாட்டுத் திட்டங்கள், கால்நடை மருத்துவ சேவைகளின் விரிவாக்கம் மற்றும் நோய் தடுப்பு முயற்சிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட பால் சேகரிப்பு, பதனப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டல் உள்கட்டமைப்பு மூலம் பால்வளத் துறையை வலுப்படுத்துவதற்கும் பட்ஜெட் வலியுறுத்துகிறது. பால்வளம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் கால்நடை விவசாயி உற்பத்தியாளர் அமைப்புகளை ஆதரிப்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தற்சார்பு இந்தியா தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, பட்ஜெட் புதுமை, தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் கால்நடை வளர்ப்பில் தனியார் துறை பங்கேற்பை ஊக்குவிக்கிறது. தீவன மேம்பாடு, தீவனப் பாதுகாப்பு மற்றும் காலநிலைக்கு ஏற்ற கால்நடை பராமரிப்பு நடைமுறைகளை நோக்கமாகக் கொண்ட முயற்சிகள் இந்தத் துறையின் நீண்டகால நிலைத்தன்மையை உறுதிப்படுத்த உதவும்.
பட்ஜெட் முக்கிய அறிவிப்புகள்:
1. கால்நடை வளர்ப்பு தொழில்முனைவோருக்கான கடன் உதவியுடன் கூடிய மானியத் திட்டம்
இந்தத் திட்டம் கால்நடை, பால் மற்றும் கோழிப் பண்ணைத் தொழில்களுக்குப் பயனளிக்கும். விவசாயிகள் நவீன உபகரணங்களைப் பயன்படுத்தவும், உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், கிராமப்புறத் துறைகளில் மதிப்புச் சங்கிலிகளை உருவாக்கவும் உதவும் நோக்கம் கொண்டது.
2. பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு
இதில் 20,000 கால்நடை மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கான திட்டங்களும் அடங்கும். இது நாடு முழுவதும் கால்நடை மருத்துவ சேவைகளை வலுப்படுத்தும் ஒரு முயற்சியாகும். இதில் கால்நடைகளுக்கான நோயறிதல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரப் பராமரிப்பும் அடங்கும். கால்நடை வளர்ப்பு, பால் மற்றும் கோழி பண்ணை மதிப்புச் சங்கிலிகளை நவீனமயமாக்குதல் மற்றும் விரிவுபடுத்துதல், உற்பத்தித்திறன் மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்பை மேம்படுத்துதல் ஆகியவை இதன் நோக்கமாகும்.
***
PKV/TV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2221902)
வருகையாளர் எண்ணிக்கை : 122