கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
உலகளவில் கடல்சார்துறையின் வல்லரசாகஇந்தியாவை மாற்றுவதில் மத்திய பட்ஜெட் முக்கிய பங்கு வகிக்கிறது: சர்பானந்த சோனோவால்
இடுகை இடப்பட்ட நாள்:
01 FEB 2026 7:21PM by PIB Chennai
சீர்திருத்தங்களைத் துரிதப்படுத்தி, இந்தியாவின் பொருளாதார மாற்றத்தை அதிகரிக்க மத்திய பட்ஜெட் வழிவகுக்கிறது என்று மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார். நீடித்த பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துதல், திறன் மேம்பாட்டின் மூலம் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுதல், அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்தல் ஆகிய அரசின் மூன்று முக்கிய கடமைகளின் பிரதிபலிப்பாக மத்திய பட்ஜெட் விளங்குகிறது என்று அமைச்சர் கூறினார். கடல்சார் துறையில் தற்சார்பை அதிகரிக்கவும், விநியோகச் சங்கிலியின் மீள்தன்மையை வலுப்படுத்தவும், 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான கொள்கலன் உற்பத்தித் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது என்றார். இந்தியாவின் பசுமையான, நீடித்த சரக்குப் போக்குவரத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில் அடுத்த 5 ஆண்டுகளில் 20 புதிய தேசிய நீர்வழித்தடங்கள் செயல்பாட்டிற்கு வரும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
கடலோர சரக்கு போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்படும் என்ற பட்ஜெட் அறிவிப்பு, வழக்கமான ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்திலிருந்து நீர்வழி சரக்குப் போக்குவரத்திற்கு மாறுவதற்கு உத்வேகமளிக்கும் என்றார் அவர். இது அனைவருக்குமான பட்ஜெட் என்று கூறிய அமைச்சர், இளைஞர் சக்தியை ஊக்குவித்து, நாடு முழுவதும் சமச்சீரான வளர்ச்சியை உறுதி செய்ய வழிவகுக்கும் என்றார். இதன் மூலம் வளர்ச்சியின் பலன் நாட்டின் கடைக்கோடி பகுதி வரை சென்றடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221817®=3&lang=1
***
SG/PD/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2221900)
வருகையாளர் எண்ணிக்கை : 72