மருந்துகள் துறை
உயிரி மருந்து துறையில் உலகளாவிய மையமாகஇந்தியாவை மாற்றுவதற்கு ‘உயிரி மருந்துகள் சக்தி’ திட்டம் பட்ஜெட்டில்அறிவிக்கப்பட்டுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
01 FEB 2026 2:07PM by PIB Chennai
நீடித்த பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தும் விதமாக மருந்துகள் துறை உள்ளிட்ட 7 முக்கிய மற்றும் முன்னணி துறைகளில் உற்பத்தியை அதிகரிக்க 2026-27 மத்திய பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, உயிரி மருந்துகள் சக்தி’ திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு 10,000 கோடி ரூபாய் மதிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ், மருத்துவ ஆராய்ச்சியை மேம்படுத்த அங்கீகாரம் பெற்ற 1,000-க்கும் மேற்பட்ட மருத்துவப் பரிசோதனை மையங்கள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மருந்து துறையில் கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்தும் வகையில், 3 புதிய தேசிய மருந்துகள் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் (NIPERs) அமைக்கப்படும் என்றும், ஏற்கனவே உள்ள 7 தேசிய மருந்துகள் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் தரம் உயர்த்தப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள், இந்திய மருந்து துறையை உறுதியானதாகவும், புதுமைகள் நிறைந்ததாகவும், உலக அளவில் போட்டித்தன்மை வாய்ந்ததாகவும் கட்டமைப்பவதற்கான முக்கிய படியாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221492®=3&lang=1
***
SG/PD/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2221899)
வருகையாளர் எண்ணிக்கை : 57