பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
பெண்கள் தலைமையிலான வளர்ச்சி, குழந்தைகள் நலன் ஆகியவற்றில் அரசின் உறுதிப்பாட்டிற்கு மத்திய பட்ஜெட் ஒரு வலுவான சான்றாகும்: மத்திய அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி
प्रविष्टि तिथि:
01 FEB 2026 5:43PM by PIB Chennai
மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், இன்று (01 பிப்ரவரி 2026) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டை வரவேற்று, மத்திய மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி கருத்துத் தெரிவித்துள்ளார்
மத்திய பட்ஜெட் 2026–27, பெண்கள் தலைமையிலான வளர்ச்சி, குழந்தைகள் நலன் ஆகியவற்றின் மீதான அரசின் உறுதிப்பாட்டிற்கு ஒரு வலுவான சான்றாகும் என அவர் தெரிவித்துள்ளார். 2026-27-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் பெண்கள், குழந்தைகள் நலனுக்கான ஒதுக்கீடு கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது, மகளிரின் சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, வாழ்வாதாரம், பாதுகாப்பு ஆகியவற்றில் அரசின் தொடர்ச்சியான அக்கறையைப் பிரதிபலிக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெண் தொழில்முனைவோர், சுயஉதவிக் குழுக்களை ஊக்குவித்தல், குழந்தைகளின் நல்வாழ்வு, பெண் கல்வியை மேம்படுத்துதல் போன்ற அனைத்துக்கும் இந்த பட்ஜெடில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக திருமதி அன்னபூர்ணா தேவி தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221730®=3&lang=1
***
VL/PKV/PLM/KR/SH
(रिलीज़ आईडी: 2221887)
आगंतुक पटल : 7