ஆயுஷ்
மத்தியப் பிரதேச சுகாதாரத் துறை அமைச்சர் திரு நரேந்திர சிவாஜி படேல், மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் சந்திப்பு
प्रविष्टि तिथि:
31 JAN 2026 2:12PM by PIB Chennai
மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சரும், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சருமான திரு பிரதாப்ராவ் ஜாதவை, மத்தியப் பிரதேச சுகாதாரத் துறை அமைச்சர் திரு நரேந்திர சிவாஜி படேல் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பின் போது, மத்திய பிரதேசத்தில் சுகாதார சேவைகள் எளிதில் கிடைக்கக் கூடியதாகவும், மக்களை மையமாகக் கொண்டதாகவும் மாற்றுவதில் கவனம் செலுத்தி, சுகாதார சேவை வழங்கும் அமைப்பை நவீனமயமாக்குவது, வலுப்படுத்துவது போன்ற அம்சங்கள் குறித்து விவாதித்தனர்.
சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், பொதுமக்களின் நலனுக்காக பாரம்பரிய மற்றும் நவீன மருத்துவ முறைகளை ஒருங்கிணைப்பதற்கும் திரு படேலின் தொலைநோக்குப் பார்வைக்கு திரு ஜாதவ் பாராட்டுத் தெரிவித்தார்.
பொது சுகாதாரத் துறையை மேம்படுத்துவதில் திரு படேலின் அர்ப்பணிப்புணர்வுடன் கூடிய பணிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான ஒருங்கிணைந்த முயற்சிகள், ஒவ்வொரு குடிமகனுக்கும் சிறந்த சுகாதார வசதிகளை உறுதி செய்ய உதவிடும் என்றும் திரு ஜாதவ் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221185®=3&lang=1
***
TV/SV/RK
(रिलीज़ आईडी: 2221275)
आगंतुक पटल : 8