PIB Headquarters
azadi ka amrit mahotsav

உரங்களின் சமச்சீர் பயன்பாடு நிலையான விவசாயத்திற்கு முக்கிய காரணி

प्रविष्टि तिथि: 31 JAN 2026 10:15AM by PIB Chennai

இந்தியாவின் விவசாய வரலாற்றில் பசுமைப் புரட்சி ஒரு தீர்க்கமான திருப்புமுனையாகும். 1960-களின் நடுப்பகுதியில் உரங்களால் அதிக மகசூல் ஏற்பட்டது. விரிவாக்கப்பட்ட நீர்ப்பாசனம், ரசாயன உரங்களின் பயன்பாடு ஆகியவற்றால் உற்பத்தி அதிகரித்தது. உணவு தானிய உற்பத்தியில் ஏற்பட்ட இந்த விரைவான வளர்ச்சி தேசிய உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தது மட்டுமல்லாமல், பசியைக் கணிசமாகக் குறைத்து, கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்தியது. இந்தியாவை மற்ற வளரும் நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக நிலைநிறுத்தியது.

இருப்பினும் நைட்ரஜன் உரங்களை அளவுக்கு அதிகமாக நம்பியிருத்தல், கரிம உரங்களின் பயன்பாடு குறைவு ஆகியவை, ஊட்டச்சத்து ஏற்றத்தாழ்வுகள், மண்ணின் ஆரோக்கியத்தில் சரிவு ஆகியவற்றுக்கு வழிவகுத்தது.

சமநிலையற்ற வகையில் உரமிடுதல் மண் சீரழிவைத் தாண்டி நீண்டகால விளைவுகளை ஏற்படுத்துகிறது. இந்த செயல்முறைகள் சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு பங்களிக்கின்றன. இவை சுகாதார அபாயங்களையும் ஏற்படுத்துகின்றன.

எனவே, மண் வளத்தைப் பராமரிப்பதும், அறிவியல் பூர்வமாக நல்ல நடைமுறைகளைப் பின்பற்றுவதும் விவசாய உற்பத்தியின் நிலைத்தன்மைக்கு அடிப்படையாகும். மண் வளம், அதன் வேதியியல், இயற்பியல், உயிரியல் பண்புகளால் தீர்மானிக்கப்படுகிறது. இது திறமையான ஊட்டச்சத்து பயன்பாடு, பொருளாதார நம்பகத்தன்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றுக்கான அடிப்படையை உருவாக்குகிறது.

சமநிலையற்ற உரமிடுதலால் ஏற்படும் சவால்களை குறைக்கும், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், நீண்டகால உர பரிசோதனைகள் குறித்த அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டத்தை தொடங்கியது. பல்வேறு வகையான வேளாண் பகுதிகள், பயிர் முறைகளில் செயல்படுத்தப்பட்ட இந்த ஆய்வு, மண் ஆரோக்கியம், பயிர் உற்பத்தித்திறன் ஆகியவற்றில் நீடித்த உர பயன்பாட்டின் நீண்டகால விளைவுகளை மதிப்பிடுகிறது.

உரங்கள் பரவலாக கனிம மற்றும் கரிம உரங்களாக வகைப்படுத்தப்படுகின்றன. கனிம உரங்கள் என்பவை குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்களை செறிவூட்டப்பட்ட வடிவங்களில் கொண்ட ரசாயன சேர்மங்களாகும். இதனால் பயிர்களுக்கு துல்லியமான, உடனடி ஊட்டச்சத்து விநியோகம் கிடைக்கிறது.

கரிம உரங்கள் என்பவை விலங்கு எருக்கள், பயிர் எச்சங்கள் போன்ற இயற்கை மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன. அவை மண்ணின் செயல்பாடுகளை மேம்படுத்துவதோடு, சீரான வடிவத்தில் படிப்படியாக ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன,

சமச்சீர் ஊட்டச்சத்து மேலாண்மை என்ற முறையானது, ஊட்டச்சத்து உறிஞ்சுதலை அதிகப்படுத்தி இழப்புகளைக் குறைப்பதன் மூலம் உர பயன்பாட்டுத் திறனை மேம்படுத்துகிறது. அதே நேரத்தில் மேம்பட்ட தாவர வளர்ச்சி, பயிர் செயல்திறன், உற்பத்தித்திறன் ஆகியவற்றுக்கு இடையே ஒருங்கிணைந்த தொடர்புகளை வளர்க்கிறது. இது நீண்ட காலத்திற்கு மண் வளத்தை நிலைநிறுத்துகிறது.

சமச்சீர் உரமிடுதல் என்பது, பயிர் தேவைகள், மண் வள நிலை, பருவ நிலை நிலைமைகளின் அடிப்படையில், அனைத்து அத்தியாவசிய தாவர ஊட்டச்சத்துக்களை பொருத்தமான விகிதாச்சார முறைகளில் பயன்படுத்துவதாகும். இது நைட்ரஜன் (N), பாஸ்பரஸ் (P), பொட்டாசியம் (K) ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்தும் வழக்கமான நடைமுறையைத் தாண்டி, முழுமையான ஊட்டச்சத்து மேலாண்மை அணுகுமுறையை ஒருங்கிணைக்கிறது.

சமச்சீர் உரமிடுதல் நிலையான விவசாயத்தின் அடிப்படைத் தூணாக அமைகிறது. இது பரந்த அளவிலான வேளாண், பொருளாதார, சுற்றுச்சூழல் நன்மைகளை வழங்குகிறது.

மேலும் விவரங்களுக்குக் கீழ்க்கண்ட இணையதள இணைப்புகளைப் பார்க்கவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221117&reg=3&lang=1

https://sansad.in/getFile/loksabhaquestions/annex/176/AU294.pdf?source=pqals

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2104403&reg=3&lang=2

https://agritech.tnau.ac.in/agriculture/agri_nutrientmgt_fertilizers.html

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2201002&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2116211&reg=3&lang=1

https://www.pib.gov.in/Pressreleaseshare.aspx?PRID=1526158&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2189508&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=155036&ModuleId=3&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2172960&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?id=156820&NoteId=156820&ModuleId=3&reg=1&lang=1

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=154966&ModuleId=3&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2175205&reg=3&lang=2

https://www.indiabudget.gov.in/economicsurvey/doc/echapter.pdf  

***

TV/PLM/RK


(रिलीज़ आईडी: 2221234) आगंतुक पटल : 18
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali