மாநிலங்களவைச் செயலகம்
azadi ka amrit mahotsav

கொரியக் குடியரசின் நாடாளுமன்றக் குழு, மாநிலங்களவை துணைத்தலைவர் திரு ஹரிவன்ஷை சந்தித்தது

இடுகை இடப்பட்ட நாள்: 30 JAN 2026 4:21PM by PIB Chennai

கொரியக் குடியரசின் நாடாளுமன்ற துணைத்தலைவர் திரு லீ ஹேக்-யங் தலைமையிலான கொரியக் குடியரசின் நாடாளுமன்றக் குழு, இன்று நாடாளுமன்ற வளாகத்தில் மாநிலங்களவை துணைத்தலைவர் திரு. ஹரிவன்ஷை சந்தித்தது.

இந்த சந்திப்பின் போது, இந்தியாவும் கொரியக் குடியரசும் வலுவான, முற்போக்கான ஜனநாயக நாடுகள் என்றும், நாடாளுமன்ற பரிமாற்றங்கள் மூலம்  வலுவான பாரம்பரியத்தைப் பகிர்ந்து கொள்கின்றன என்றும் திரு ஹரிவன்ஷ் கூறினார். இரு நாடாளுமன்றங்களுக்கிடையே நடைபெறும் வழக்கமான உரையாடலும்,  தொடர்பும் இருநாடுகளின் சிறப்பான உத்திசார் கூட்டாண்மையை வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கு இடையேயான வரலாறு மற்றும் கலாச்சாரத் தொடர்புகள் பற்றிக் குறிப்பிட்ட திரு ஹரிவன்ஷ், அயோத்தி இளவரசி சுரிரத்னாவுக்கும் கிம்ஹேயின் மன்னர் கிம் சுரோவுக்கும் இடையேயான திருமணக் கூட்டணி மூலம் இந்தியாவும் கொரியக் குடியரசும் இணைக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் திருமதி ரேகா சர்மா, திரு முசிபுல்லா கான், டாக்டர் பர்மர் ஜஷ்வந்த்சிங் சலாம்சிங், மாநிலங்களவை பொதுச் செயலாளர் திரு பி.சி. மோடி, மாநிலங்களவைச் செயலகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2220851&reg=3&lang=1

****

TV/SMB/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2220994) வருகையாளர் எண்ணிக்கை : 86
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी