விண்வெளித்துறை
விண்வெளிப் பொருளாதாரத்தில் தனியார் துறையின் பங்கேற்பை அரசு ஊக்குவித்து வருகிறது
प्रविष्टि तिथि:
29 JAN 2026 2:30PM by PIB Chennai
இன்றைய தேதி வரையில், பல்வேறு விண்வெளி சார் நடவடிக்கைகளுக்காக IN-SPACe டிஜிட்டல் தளத்தில் (IDP) தோராயமாக 1050 தனியார் நிறுவனங்கள் தங்களின் திறன்களை வழங்கியுள்ளன. இந்திய விண்வெளி கொள்கை-2023, தனியார் நிறுவனங்கள் ராக்கெட் ஏவுதல், செயற்கைக்கோள் உருவாக்கம் மற்றும் செயல்பாடுகள், தரவு சேகரிப்பு மற்றும் பரவல், தரையிறங்கும் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து விண்வெளி சார் நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிவகை செய்கிறது.
இதுவரை, IN-SPACe புத்தாக்க நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் மொத்தம் 2.36 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் சந்தை விரிவாக்கம் போன்ற நடவடிக்கைகள் மூலம் விண்வெளி பொருளாதாரம் ஊக்குவிக்கப்படுகிறது. இதன் மூலம் இத்துறை சார்ந்த சேவைகள் மேம்படுத்தப்பட்டு ஏற்றுமதி அதிகரிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2220035®=3&lang=1
****
TV/PD/EA
(रिलीज़ आईडी: 2220474)
आगंतुक पटल : 7