புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மொத்த உள்நாட்டு உற்பத்தி, தொழில்துறை உற்பத்தி மற்றும் நுகர்வோர் விலைக் குறியீடுகளின் அடிப்படைத் திருத்தம் குறித்த வெளியீட்டிற்கு முந்தைய கலந்தாய்வுக் கருத்தரங்கு நாளை சென்னையில் நடைபெற உள்ளது.

இடுகை இடப்பட்ட நாள்: 29 JAN 2026 1:18PM by PIB Chennai

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) சார்பில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), தொழில்துறை உற்பத்தி குறியீடு (IIP) மற்றும் நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) ஆகியவற்றில் அடிப்படைத் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக, வெளியீட்டிற்கு முந்தைய கலந்தாய்வுக் கருத்தரங்கு நடைபெற உள்ளது. 2025 நவம்பரில் மும்பையிலும், 2025 டிசம்பரில் புதுதில்லியிலும் வெற்றிகரமாக நடத்தப்பட்ட முதல் இரண்டு கலந்தாய்வுக் கருத்தரங்குகளைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக நாளை (ஜனவரி 30) சென்னையில் நடைபெறுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி, தொழில்துறை உற்பத்தி குறியீடு மற்றும் நுகர்வோர் விலைக் குறியீடு ஆகியவற்றில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படைத் திருத்த நடைமுறைகளில் முன்மொழியப்பட்டுள்ள கட்டமைப்பு மாற்றங்களை முன்வைத்தல் மற்றும் இதில் சம்பந்தப்பட்ட பங்குதாரர்களிடமிருந்து கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெறுவதை நோக்கமாக் கொண்டு இந்த கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிகழ்ச்சி, பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் முன்னாள் தலைவரும், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநருமான டாக்டர் சி. ரங்கராஜன்; தேசிய புள்ளியியல் ஆணையத்தின் தலைவர் பேராசிரியர் ராஜீவ லட்சுமணன் கரண்டிகர், மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் சௌரப் கார்க், பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் டாக்டர் ஷமிகா ரவி மற்றும் இயக்குநர் ஜெனரல் (மத்திய புள்ளியியல்) திரு. என். கே. சந்தோஷி ஆகியோரின் உரைகளுடன் நாளைய அமர்வு தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து மொத்த உள்நாட்டு உற்பத்தி, தொழில்துறை உற்பத்தி குறியீடு மற்றும் நுகர்வோர் விலைக் குறியீடு குறித்த தொழில்நுட்ப அமர்வுகள், விவாதங்களுடன் நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2220006&reg=3&lang=1

 

*****

TV/PD/EA


(வெளியீட்டு அடையாள எண்: 2220214) வருகையாளர் எண்ணிக்கை : 22
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी