மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.199.24 கோடி செலவில், அந்தமானில் நவீன மற்றும் ஒருங்கிணைந்த மீன்பிடி துறைமுகத்திற்கு ஒப்புதல்
प्रविष्टि तिथि:
27 JAN 2026 3:59PM by PIB Chennai
பிரதமரின் மீன்வளர்ப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 100 சதவீத மத்திய அரசின் நிதியுதவியுடன் ரூ.199.24 கோடி செலவில், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவில் உள்ள மாயாபந்தரில் நவீன மற்றும் ஒருங்கிணைந்த மீன்பிடி துறைமுகம் மேம்பாட்டிற்காக யூனியன் பிரதேச நிர்வாகத்தின் முன்மொழிவுக்கு மத்திய மீன்வளத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.
நவீன தொழில்நுட்பத்துறை ஆதரவுடன் மீன்பிடி படகுகளை பாதுகாப்பாக கரைக்குக் கொண்டுவருவது, மீன்களை சேமிப்புக் கிடங்குகளில் இருப்பு வைப்பது போன்ற வசதிகள் நவீன மற்றும் ஒருங்கிணைந்த மீன்பிடி துறைமுகத்தில் ஏற்படுத்தப்படும்.
இது வேலைவாய்ப்பை உருவாக்கி இத்தொழிலில் தொடர்புடையவர்களது வருவாயை அதிகரித்து வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என்றும் சட்டவிரோத செயல்களுக்குத் தீர்வு காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவீன மற்றும் ஒருங்கிணைந்த மீன்பிடி துறைமுக மேம்பாடு 430 மீன்பிடி படகுகள் கரை சேரவும், மீன்களை இருப்பு வைக்கவும் ஆண்டுக்கு 9,900 டன் மீன்களை கரைக்குக் கொண்டுவரவும் உதவும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219148®=3&lang=1
***
TV/IR/KPG/SE
(रिलीज़ आईडी: 2219325)
आगंतुक पटल : 19