ஆயுஷ்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் மருத்துவ பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கான ஆயுஷ் அமைச்சகத்தின் முன் முயற்சிகள்

प्रविष्टि तिथि: 27 JAN 2026 1:31PM by PIB Chennai

இந்தியாவின் வளமான மருத்துவ பாரம்பரியத்தைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக் கழகம், புது தில்லியில் உள்ள மத்திய சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, 2026 ஜனவரி 12 முதல் 25 வரை கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள மத்திய சமஸ்கிருதப் பல்கலைக்கழக புராணத்துக்கரை (குருவாயூர்) வளாகத்தில், ஆயுர்வேத கையெழுத்துப் பிரதிகள் குறித்த 15 நாள் மொழிபெயர்ப்புத் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கு நடைபெற்றது.

இந்த இரண்டு வார கால பயிலரங்கில், ஆயுர்வேதத் துறையைச் சேர்ந்த 18 நபர்கள் மற்றும் சமஸ்கிருதத்தைச் சேர்ந்த 15 நபர்கள் உட்பட 33 துறை சார்ந்த நிபுணர்கள் பங்கேற்றனர். இது கையெழுத்துப் பிரதி ஆய்வுகளில் பன்முகத் தன்மையுடன் கூடிய நடவடிக்கைகளுக்கு உத்வேகம் அளிப்பதாக அமைந்தது.

இந்த இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் பயிலரங்கு, வளமான ஆயுர்வேத கையெழுத்துப் பிரதிகளை ஆவணப்படுத்துதல், டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் ஆராய்ச்சி முடிவுகளின்  அடிப்படையில், பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான  மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தின் தேசிய அளவிலான முன்முயற்சியின் ஒரு அங்கமாகும்.

இந்தப் பயிற்சித் திட்டத்தில், கையெழுத்துப் பிரதிவியல், பழங்கால எழுத்தியல், தொழில்நுட்ப ஆயுர்வேத கலைச்சொற்கள் மற்றும் எழுத்து முறை அறிமுகம் போன்ற முக்கிய அம்சங்களை கொண்டதாக இருந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219028&reg=3&lang=1

(Release ID: 2219028)

TV/SV/KPG/KR


(रिलीज़ आईडी: 2219225) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी