சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சரக்கு மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாய சென்னை அமர்வின் உறுப்பினர்கள் பொறுப்பேற்றனர்
प्रविष्टि तिथि:
22 JAN 2026 2:06PM by PIB Chennai

சரக்கு மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாய சென்னை அமர்வு, பின்வரும் உறுப்பினர்கள் இன்று பொறுப்பேற்றதன் மூலம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
1. திரு கிரீஷ் குமார் வைஷ், நீதித்துறை உறுப்பினர்
2. திரு பிரவீண் குமார் ஜெயின், நீதித்துறை உறுப்பினர்
3. திரு ஷேக் காதர் ரஹ்மான், தொழில்நுட்ப உறுப்பினர் (மையம்)
இந்த உறுப்பினர்கள் பொறுப்பேற்றிருப்பது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை செயல்படுத்துவதில் முக்கியமான நடவடிக்கையாகும். ஜிஎஸ்டி தொடர்பான மேல்முறையீடுகளுக்கு சரியான நேரத்தில், பயனுள்ள முறையில் தீர்வுகாண்பதை உறுதி செய்வதன் மூலம், சரக்கு மற்றும் சேவை வரி கட்டமைப்பின் கீழ் சர்ச்சை தீர்வு நடைமுறையை வலுப்படுத்துவதில் ஜிஎஸ்டிஏடி-ன் சென்னை அமர்வு முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவாகவும் நியாயமாகவும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வலுவான மேல்முறையீட்டு நடைமுறையை நிறுவுவதே ஜிஎஸ்டிஏடி-ன் நோக்கமாகும். வரி செலுத்தும் ஒவ்வொருவரின் மேல்முறையீடும் கேட்கப்படுவதையும், நீதியில் தாமதம் இல்லாமல் உரிமைகள் பாதுகாக்கப்படுவதையும் இது உறுதி செய்து, குடிமக்களுக்கும் அரசுக்கும் இடையிலான நம்பிக்கையை பலப்படுத்தும்.

சென்னை ஜிஎஸ்டிஏடி அமர்வு தொடங்கப்படுவது மேல்முறையீடுகளின் நிலுவையைக் குறைப்பதில் குறிப்பிடத்தக்க அளவு உதவி செய்யும். வரி செலுத்துவோர் மற்றும் வரி நிர்வாகத்திற்கு, அணுகக்கூடிய, திறமையான மேல்முறையீட்டு அமைப்பை வழங்கும்.
மத்திய சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம், 2017, அதன் கீழ் உருவாக்கப்பட்ட தொடர்புடைய பிற ஜிஎஸ்டி சட்டங்கள் மற்றும் விதிகளின்படி இந்த அமர்வு செயல்படும்.
***
AD/SMB/KR
(रिलीज़ आईडी: 2217236)
आगंतुक पटल : 102
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English