அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
உள்நாட்டு டிஜிட்டல் சுகாதார நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை
प्रविष्टि तिथि:
21 JAN 2026 3:47PM by PIB Chennai
நோய் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல், உள்நாட்டில் உருவாக்கப்பட்ட மருத்துவ தொழில்நுட்பங்களை ஊக்குவித்தல், ஆராய்ச்சி முடிவுகளை பயன்பாட்டிற்கான சுகாதாரத் தீர்வுகளாக மாற்றுதல் போன்றவற்றிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின், தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் , மகாராஷ்டிராவைச் சேர்ந்த மெஸ்ஸர்ஸ் டாக்டர்ஸ்டோர் ஹெல்த்கேர் சர்வீஸ் இந்தியா என்ற தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் டிஜிட்டல் சுகாதாரத் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை இணைந்து மேற்கொள்ள வகை செய்கிறது.
இந்த முன்முயற்சியின் கீழ், "நீரிழிவு நோயைக் கண்காணிப்பதுடன், இதய நோய்களை முன்கூட்டியே கண்டறிவதற்கான இதயத் துடிப்பை அறிந்துகொள்ள உதவிடும் குறியீடுகளுடன் கூடிய பல்முனை தொடர் குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனம்" என்ற பெயரிலான திட்டத்திற்கு தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் மானிய உதவி வழங்க அனுமதி அளித்துள்ளது. இந்தத் திட்டம் இந்தியா - கனடா கூட்டுத் தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தியா - கனடா கூட்டுத் தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டம் என்பது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கும், கனடாவின் தேசிய ஆராய்ச்சி மன்றம் மற்றும் குளோபல் அஃபயர்ஸ் கனடா ஆகிய அமைப்புகளுக்கும் இடையேயான கூட்டு அமைப்பாகும். இது சமூக முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தக ரீதியிலான தொழில்நுட்ப சேவைகளுக்கு வழிவகுப்பதுடன், தொழில்துறை சந்தை வாய்ப்புக்களை பெறும் வகையிலான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டம், கனடாவில் உள்ள முதன்மை நிறுவனமான மெஸ்ஸர்ஸ் நானோஸ்பீட் டயக்னாஸ்டிக்ஸ் இன்க். நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2216879®=3&lang=1
---
TV/SV/RK
(रिलीज़ आईडी: 2217046)
आगंतुक पटल : 8