மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
கால்நடைகள் குறித்த புள்ளியியல் விவரங்கள் தொடர்பான தொழில்நுட்ப வழிக்காட்டுதல் குழுமத்தின் இரண்டு நாள் கூட்டம் விஜயவாடாவில் நடைபெறுகிறது
प्रविष्टि तिथि:
21 JAN 2026 4:47PM by PIB Chennai
கால்நடைகள் குறித்த புள்ளியியல் விவரங்களை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்ப வழிகாட்டுதல் குழுவின் ஆண்டுக் கூட்டத்திற்கு மத்திய மீனவளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்த இரண்டு நாள் கூட்டம் ஆந்திரப்பிரதேச மாநிலம் விஜயவாடாவில் 2026 ஜனவரி 22, 23 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது. ஒருங்கிணைந்த மாதிரி கணக்கெடுப்புத் திட்டத்தின் வழிமுறைகள் மற்றும் அமலாக்கத்திற்கு வழிகாட்டக் கூடிய ஒரு முக்கிய தொழில்நுட்ப அமைப்பாக தொழில்நுட்ப வழிகாட்டுதல் குழு திகழ்கிறது.
இத்திட்டம் பால், முட்டை, கம்பளி, இறைச்சி போன்ற முக்கிய கால்நடைப் பொருட்களின் தேசிய அளவிலான உற்பத்தியை மதிப்பிடுவதற்கான முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2216927®=3&lang=1
***
AD/IR/KPG/RK
(रिलीज़ आईडी: 2217032)
आगंतुक पटल : 7