மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய மீன்வளத்துறைச் செயலாளர் டாக்டர் அபிலக்ஷ் லிக்கி மத்திய உவர் மீன் வளர்ப்பு நிறுவனத்தை பார்வையிட்டார்

प्रविष्टि तिथि: 19 JAN 2026 5:22PM by PIB Chennai

சென்னையில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் மத்திய உவர் மீன் வளர்ப்பு நிறுவனம் (ஐசிஏஆர் சிஐபிஏ) மற்றும் முட்டுக்காடு ஆய்வு நிலையத்தை மத்திய மீன்வளத்துறைச் செயலாளர் டாக்டர் அபிலக்ஷ் லிக்கி இன்று பார்வையிட்டார்.  அப்போது இறால் மீன்வளர்ப்பு விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருடன் அவர் உரையாடினார். உற்பத்தி, பதப்படுத்துதல், சந்தைப்படுத்துதல் ஆகிய பல்வேறு நிலைகளில் தாங்கள் எதிர்கொண்டு வரும் சவால்கள், சிறந்த நடைமுறைகள், வெற்றிக் கதைகள் ஆகியவற்றை இறால் மீன்வளர்ப்பு விவசாயிகளும் தொழில் முனைவோர்களும் பகிர்ந்து கொண்டனர்.

மத்திய மீன்வளர்ப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் மத்திய உவர் மீன் வளர்ப்பு நிறுவனம் அமல்படுத்தி வரும் வெள்ளை இறால் மரபணு மேம்பாட்டு திட்டப்பகுதியையும் டாக்டர் லிக்கி பார்வையிட்டார். துடுப்பு மீன், வண்ணமீன், நண்டு வளர்ப்பு மற்றும் தீவன ஆலைகள் உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சி வசதிகளையும் ஆய்வு செய்து  விஞ்ஞானிகளுடன் உரையாடினார். 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2216176&reg=3&lang=1

  ***

AD/IR/KPG/RK


(रिलीज़ आईडी: 2216259) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी