குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
பிரதமரின் விஸ்வகர்மா திட்ட கண்காட்சி - புது தில்லியில் தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் திரு ஜிதன் ராம் மஞ்சி
கிராமப்புறங்களைச் சேர்ந்த கைவினைக் கலைஞர்கள் தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்ய இது சிறந்த தளம்: திரு ஜிதன் ராம் மஞ்சி
प्रविष्टि तिथि:
18 JAN 2026 4:56PM by PIB Chennai
மத்திய குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு ஜிதன் ராம் மஞ்சி, தமது அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரதமரின் விஸ்வகர்மா திட்ட கண்காட்சி 2026-ஐ புது தில்லியில் இன்று (18.01.2026) தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு ஜிதன் ராம் மஞ்சி, பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் சாதனைகளை எடுத்துரைத்தார். கண்காட்சியை ஏற்பாடு செய்த குழுவை அவர் பாராட்டினார். கிராம அளவிலான பின்னணியைச் சேர்ந்த கைவினைக் கலைஞர்கள் தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கு பிரதமரின் விஸ்வகர்மா திட்ட கண்காட்சி ஒரு மதிப்புமிக்க தளத்தை வழங்குகிறது என்று அவர் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் துடிப்பான தலைமையின் கீழ், இந்தத் திட்டம் நாட்டில் உள்ள கைவினைக் கலைஞர்களின் வளர்ச்சிக்குப் பங்களிக்க ஒரு தளத்தை வழங்குகிறது என்று அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பேசிய மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை இணையமைச்சர் செல்வி ஷோபா கரந்த்லஜே, "பிரதமரின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், பிரதமரின் விஸ்வகர்மா முயற்சி குறிப்பிடத்தக்க மைல்கற்களை எட்டியுள்ளது என்றார். பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 117க்கும் மேற்பட்ட கைவினைஞர்கள் இந்தக் கண்காட்சியில் பங்கேற்பதைக் காண்பது உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது என்று அவர் கூறினார்.
அமைச்சகத்தின் செயலாளர் திரு எஸ்.சி.எல். தாஸ், கூடுதல் செயலாளர் திரு ரஜ்னீஷ் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இன்று (ஜனவரி 18) முதல் ஜனவரி 31 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சி இந்தியாவின் வளமான கைவினைத்திறன் பாரம்பரியத்தைக் கொண்டாடுகிறது. இந்தக் கண்காட்சி தினமும் காலை 10:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை பொதுமக்களுக்கு திறந்திருக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2215839®=3&lang=1
***
TV/PLM/RK
(रिलीज़ आईडी: 2215896)
आगंतुक पटल : 8