பாதுகாப்பு அமைச்சகம்
ஐஎன்எஸ் சாகர்த்வானி கப்பல் ஐந்தாவது சாகர் மைத்ரி பயணத்தை தொடங்கியது
प्रविष्टि तिथि:
18 JAN 2026 1:40PM by PIB Chennai
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ-வின் கடல்சார் ஆய்வகத்தின் கீழ் இயங்கும் இந்தியாவின் கடல்சார் ஆராய்ச்சி கப்பலான ஐஎன்எஸ் சாகர்த்வானி, கொச்சியின் தெற்கு கடற்படை கட்டளையிலிருந்து சாகர் மைத்ரி (SM-5) முயற்சியின் ஐந்தாவது பதிப்பிற்காக நேற்று (ஜனவரி 17, 2026) கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்தக் கப்பலை நாடாளுமன்ற உறுப்பினரும், பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவருமான திரு ராதா மோகன் சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார் . இந்த நிகழ்வில், பாதுகாப்புத் துறை நிலைக்குழுவின் உறுப்பினர்கள், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை செயலாளரும் டிஆர்டிஓ தலைவருமான டாக்டர் சமீர் வி காமத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சாகர் மைத்ரி என்பது இந்திய கடற்படை மற்றும் டிஆர்டிஓ-வின் ஒரு முதன்மை கூட்டு முயற்சியாகும். இது மத்திய அரசின் 'பிராந்தியம் முழுவதும் பாதுகாப்பு, வளர்ச்சிக்கான பரஸ்பர முன்னேற்றம் எனப்படும் மஹாசாகர் என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப நடத்தப்படும் பயணமாகும். இந்த முயற்சி, இந்தியப் பெருங்கடல் நாடுகளிடையே கடல் சார் ஆராய்ச்சியில் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சாகர் மைத்ரி திட்டத்தின் கீழ் , ஐஎன்எஸ் சாகர்த்வானி, ஓமன், மாலத்தீவுகள், இலங்கை, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, மியான்மர் ஆகிய எட்டு நாடுகளுடன் நிலையான அறிவியல் ஒத்துழைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடும் . தற்போதைய பணி மாலத்தீவுடன் கூட்டு கடல்சார் ஆய்வுகளின் தொடக்கமாக அமையும். இது இந்திய பெருங்கடல் நாடுகளின் விஞ்ஞானிகளிடையே கூட்டு ஆராய்ச்சியையும் தொழில்முறை பரிமாற்றத்தையும் உருவாக்கும்.
ஐஎன்எஸ் சாகர்த்வானி ஜூலை 1994-ல் செயல்பாட்டுக்கு வந்த காப்பலாகும். இது 3 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் கடல்சார் அறிவியல் திறன்களுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2215791®=3&lang=1
***
TV/PLM/RK
(रिलीज़ आईडी: 2215858)
आगंतुक पटल : 9