பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நொடித்துப்போதல் குறித்த முதுநிலை வகுப்பு பாடத் திட்டத்தின் 8-வது தொகுப்புக்கான பதிவை இந்தியக் கார்ப்பரேட் விவகாரங்கள் நிறுவனம் தொடங்கியது; ஐஐபிஐ-ஐசிஏஐ உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது

प्रविष्टि तिथि: 16 JAN 2026 3:10PM by PIB Chennai

மத்திய அரசின் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்தியக்  கார்ப்பரேட் விவகாரங்கள் நிறுவனம், அண்மையில் இரண்டு குறிப்பிடத்தக்க மைல்கற்களை எட்டியது. 2026, ஜனவரி 15  அன்று நொடித்துப்போதல் குறித்த முதுநிலை வகுப்பு பாடத் திட்டத்தின் 8-வது தொகுப்புக்கான பதிவை முறையாகத் தொடங்கியுள்ளது. இந்த நிறுவனம் இந்திய நொடித்துப் போதல் தொழில்முறையாளர்கள் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும்  கையெழுத்திட்டுள்ளது.

இந்தியக்  கார்ப்பரேட் விவகாரங்கள் நிறுவனத் தலைமை இயக்குநரும்  தலைமை நிர்வாக அதிகாரியுமான  ஞானேஷ்வர் குமார் சிங், இந்தியாவின் நொடித்துப் போதல் கட்டமைப்பின் வளர்ந்து வரும் தேவைகளுக்கு ஏற்ப, திறமையான மற்றும் நெறிமுறை நொடித்துப் போதல்  தொழில்முறையாளர்களை  உருவாக்குவதற்கான ஒரு முதன்மை தேசிய திட்டமாக முதுநிலைப் பாடத்திட்டம்  உருவெடுத்துள்ளது என்று கூறினார்.  கல்விச் சிறப்பு, நிறுவன ஒத்துழைப்பு மற்றும் நாட்டில் நொடித்துப் போதல் சூழல் அமைப்பை வலுப்படுத்துவதில் இரு நிறுவனங்களின் வலுவான அர்ப்பணிப்பைப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது பிரதிபலிக்கிறது என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.

கல்விப் பரிமாற்றம், திறன் மேம்பாடு, ஆராய்ச்சி, பயிற்சி திட்டங்கள், திவால்நிலை மற்றும் நொடித்துப் போதல் துறையில் அறிவுப் பகிர்வு போன்ற துறைகளில் ஒத்துழைப்பை வளர்ப்பதே இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2215275&reg=3&lang=1

***

TV/SMB/RK/SE


(रिलीज़ आईडी: 2215406) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Urdu