அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

சிஎஸ்ஐஆர் ஒருங்கிணைந்த திறன் முன்முயற்சி இந்தியாவின் திறன் மிக்கப் பணியாளர்களை மேம்படுத்துகிறது

प्रविष्टि तिथि: 16 JAN 2026 10:50AM by PIB Chennai

சிஎஸ்ஐஆர் ஒருங்கிணைந்த திறன் முயற்சி என்பது, இந்தியாவின் முதன்மையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலால் செயல்படுத்தப்படும் ஒரு முதன்மை தேசியத் திட்டமாகும். இது 'தற்சார்பு இந்தியா', 'திறன் இந்தியா' ஆகியவற்றின் தேசிய தொலைநோக்குப் பார்வையுடன் நெருக்கமாக இணைந்துள்ளது.  இது ஒருபுறம் அறிவியல் ஆராய்ச்சிக்கும் மறுபுறம் தொழில்துறை தேவைகளுக்கும் வேலைவாய்ப்பு திறன்களுக்கும் இடையேயான இடைவெளியைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. சிஎஸ்ஐஆர் - ன் பரந்த ஆராய்ச்சி உள்கட்டமைப்பு, பரவலான வலை பின்னல் களங்கள் மற்றும் நாடு முழுவதும் பரவியுள்ள ஆழமான அறிவியல் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துடன் திறன் மேம்பாட்டை தடையின்றி ஒருங்கிணைப்பதே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். இது மாணவர்கள், இளம் ஆராய்ச்சியாளர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் பணிபுரியும் தொழில்முறையாளர்கள் முதல் பள்ளியில் இடைநின்றவர்கள், ஐடிஐ,  பட்டயதாரர்கள், விவசாயிகள் மற்றும் கிராமப்புற சமூகங்கள் வரை பல வகையான பயனாளிகளுக்கு அணுகலை வழங்குகிறது. இந்த முயற்சியின் முதன்மை முக்கியத்துவம் திறன் பயிற்சியை உலக தொழில்துறை, சமூக மற்றும் தொழில்முனைவோர் கோரிக்கைகளுடன் இணைப்பதாகும்.

தேசிய திறன் மேம்பாட்டுத் திட்டத்தால் அடையாளம் காணப்பட்ட முக்கியத் துறைகளின்  36 திறன்களில் 18 திறன்களை இந்தத் திட்டம் உள்ளடக்கியது. இதில் விண்வெளி மற்றும் விமானப் போக்குவரத்து, விவசாயம், வாகனம், கட்டுமானம், மூலதனப் பொருட்கள், மின்னணுவியல், உணவு பதப்படுத்துதல், பசுமைப் பணிகள்,  சுகாதாரம், கைவினைப்பொருட்கள் மற்றும் கம்பளங்கள், இரும்பு மற்றும் எஃகு, ரப்பர், ரசாயனங்கள் மற்றும் பெட்ரோ ரசாயனம், தோல், உயிர் அறிவியல், மேலாண்மை மற்றும் தொழில்முனைவோர், சுரங்கம், ஜவுளி மற்றும் ஐடி தொழில்நுட்பங்கள் ஆகியவை அடங்கும். இந்த முயற்சியின் முக்கிய குறிக்கோள், கற்பவர்கள் வலுவான தத்துவார்த்த அறிவைப் பெறுவது மட்டுமின்றி , வேலைவாய்ப்பு, தொழில்முனைவோர் மற்றும் ஒட்டுமொத்த தொழில் வளர்ச்சியை ஆதரிக்கும் நடைமுறைத் திறன்களையும் உருவாக்குவதை உறுதி செய்வதாகும்.

கிராமப்புற குடிமக்கள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு இலக்கு முயற்சிகள் உட்பட, 5200+ திறன் அடிப்படையிலான பயிற்சிகள் மூலம் 1.90 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு சிஎஸ்ஐஆர் ஒருங்கிணைந்த திறன் முன்முயற்சி பயிற்சி அளித்துள்ளது. மேம்பட்ட திறன் மேம்பாடு, கல்வி-தொழில் இடைவெளிகளைக் குறைத்தல் மற்றும் வளர்ச்சி மற்றும் வளர்ச்சியை துரிதப்படுத்துதல் ஆகியவற்றில் புத்துயிர் பெற்ற கவனம் செலுத்தும் இந்த முயற்சியின் மூன்றாம் கட்டத்தை  ஜூன் 2025-ல் மத்திய அரசின் சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநரும் அறிவியல் மற்றும் தொழிலகத்துறை செயலாளரான டாக்டர் என். கலைசெல்வி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிவைத்தார். மூன்றாம் கட்டத்தின் முதல் ஆண்டில், நாடு முழுவதும் 37 சிஎஸ்ஐஆர் ஆய்வகங்களில் 425 க்கும் மேற்பட்ட பயிற்சித் திட்டங்கள் மூலம் 14,000-க்கும் அதிகமான பயிற்சியாளர்களுக்கு ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2215162&reg=3&lang=1

***

TV/SMB/RK


(रिलीज़ आईडी: 2215255) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी