புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
தொழிலாளர் பங்கேற்பு விகிதமும், பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதமும் டிசம்பர் 2025-ல் அதிகபட்சமாக பதிவாகியுள்ளது - ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் குறைந்துள்ளது
प्रविष्टि तिथि:
15 JAN 2026 4:00PM by PIB Chennai
புள்ளியில் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய புள்ளியியல் அமைப்பால், குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்தப்படும் தொழிலாளர் சக்தி கணக்கெடுப்பு (PLFS - பிஎல்எஃப்எஸ்), வேலைவாய்ப்பு நிலை, வேலையின்மை நிலைமைகள் ஆகியவை குறித்த தரவுகளின் முதன்மை ஆதாரமாகும். நாட்டிற்கான தொழிலாளர் சக்தி குறியீடுகளின் மாதாந்திர, காலாண்டு மதிப்பீடுகளை வழங்குவதற்காக, ஜனவரி - 2025 முதல் பிஎல்எஃப்எஸ் ஆய்வுப் கணக்கீட்டு முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
பிஎல்எஃப்எஸ்-ன் மாதாந்திர முடிவுகள் மாதாந்திர அறிக்கை வடிவில் வெளியிடப்படுகின்றன. ஏப்ரல் 2025 முதல் நவம்பர் 2025 வரையிலான மாதாந்திர அறிக்கைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. டிசம்பர் 2025-க்கான தற்போதைய மாதாந்திர அறிக்கை இந்தத் தொடரில் ஒன்பதாவது அறிக்கையாகும்.
இதன் சில முக்கிய அம்சங்கள்:
* 15 வயது, அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கான ஒட்டுமொத்த தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (எல்எஃப்பிஆர்- LFPR) ஜூன் 2025 முதல் தொடர்ந்து முன்னேற்ற போக்கில் இருந்து வருகறது. டிசம்பர் 2025-ல் இது 56.1% ஆக இருந்தது.
* 15 வயது, அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம், ஜூன் 2025 முதல் தொடர்ச்சியான அதிகரிப்பைப் பதிவு செய்து, டிசம்பர் 2025-ல் 35.3% ஆக இருந்தது. இது கடந்த ஆண்டில் காணப்பட்ட மிக உயர்ந்த அளவாகும்.
* கிராமப்புற ஆண், பெண் தொழிலாளர் பங்களிப்பு டிசம்பர் 2025-ல் அதிகரித்து, முறையே 76.0% மற்றும் 38.6% ஆக இருந்தது.
* வேலைவாய்ப்பின்மை விகிதம் டிசம்பர் 2025-ல் 4.8% ஆக இருந்தது. இது நவம்பர் 2025-ல் 4.7% ஆக இருந்தது.
* நகர்ப்புறப் பெண்களின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 2025 அக்டோபரில் அதிகபட்ச அளவாக 9.7% ஆக இருந்தது. அது டிசம்பர் 2025-ல் 9.1% ஆகக் குறைந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2214908®=3&lang=1
***
TV/PLM/RK
(रिलीज़ आईडी: 2215044)
आगंतुक पटल : 9