PIB Headquarters
இந்தியாவின் சுரங்கப்பாதைகள்: பூமிக்கு அடியில் பொறியியல் அற்புதங்கள்
प्रविष्टि तिथि:
14 JAN 2026 1:32PM by PIB Chennai
இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதை உள்கட்டமைப்புகள் புவியியல் சவால்களைத் தாண்டி நாட்டின் உறுதியை பிரதிபலிக்கின்றன. ஒரு காலத்தில் குறைந்த போக்குவரத்து இணைப்புகள் இருந்த மலைப் பகுதிகளில் சவால்களுக்கு இடையே அமைக்கப்பட்ட சுரங்கப்பாதைகள் இப்போது அப்பகுதிகளுக்கு ஆண்டு முழுவதும் போக்குவரத்தை உறுதிப்படுத்தியுள்ளன. அவை தொலைதூரப் பகுதிகளுக்கான அணுகலை மேம்படுத்தி, சமூகங்களுக்கிடையேயான இணைப்புகளை வலுப்படுத்தியுள்ளன. இமயமலையில் சுரங்கப்பாதைகள் முதல் நகர்ப்புற மெட்ரோ கட்டமைப்புகள் வரை, இந்தத் திட்டங்கள் மக்களின் வாழ்வைச் சிறப்பாக மாற்றியமைக்கின்றன. நவீன பொறியியல் திட்டமிடலைப் பயன்படுத்தி கட்டப்பட்ட சுரங்கப்பாதைகள், பொருளாதார வளர்ச்சி, தேசிய பாதுகாப்பு, பிராந்திய வளர்ச்சி ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்தியாவில் சுரங்கப்பாதை அதிகரிப்பு, தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம், எல்லை உள்கட்டமைப்பு, மெட்ரோ ரயில் வளர்ச்சி, புல்லட்-ரயில் வழித்தடங்கள், தொலைதூரப் பகுதிகளுக்கு அனைத்து வானிலைச் சூழல்களிலும் போக்குவரத்து இணைப்பு போன்றவற்றால் மக்கள் பெரிதும் பயனடைகின்றனர். சுரங்கப்பாதை அமைக்கும் பணி, தற்போது முக்கிய கட்டுமானப் பிரிவுகளில் ஒன்றாக மாறியுள்ளது.
சுரங்கப்பாதைகள் பாரம்பரிய போக்குவரத்து பாதைகளுக்கு மாற்றாக சிறந்த, பாதுகாப்பான, நிலையான போக்குவரத்தை வழங்குகின்றன. அவை பிராந்திய வளர்ச்சியை ஊக்குவித்துக் கோடிக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்துகின்றன.
கடந்த பத்து ஆண்டுகளில், நாட்டின் சுரங்கப்பாதை அமைக்கும் திறன் மாறியுள்ளது. இது பாரம்பரிய துளையிடுதல் முறைகளிலிருந்து அதிநவீன தொழில்நுட்பங்களுக்கு முன்னேறியுள்ளது. இது வேகமான, பாதுகாப்பான, மிகவும் சிக்கலான நிலத்தடி கட்டுமானத்தை செயல்படுத்துகிறது. ஒவ்வொரு சுரங்கப்பாதையும் மிகப்பெரிய அளவில சிக்கல் தீர்க்கும் திறனுக்கு சான்றாக நிற்கிறது.
பிர் பஞ்சால் மலைத்தொடர்களின் பனி நிறைந்த சிகரங்களுக்கு அடியில் அமைந்துள்ள அடல் சுரங்கப்பாதை 9.02 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இது ரோஹ்தாங் கணவாயைக் கடந்து செல்லும் உயரமான பாதையை வழங்குகிறது.
கடல் மட்டத்திலிருந்து 8,650 அடி உயரத்தில் மலைகள் வழியாக செதுக்கப்பட்ட 12 கிலோ மீட்டர் பொறியியல் சாதனையான சோனமார்க் சுரங்கப்பாதை, ஜம்மு - காஷ்மீர் மக்களின் பயணத்தை மாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது ₹2,700 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது .
ஜம்மு - காஷ்மீரில் உள்ள காரி - சம்பரை இணைக்கும் 12.77 கிலோ மீட்டர் பொறியியல் சாதனையான உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா சுரங்கப்பாதை இந்தியாவின் மிக நீளமான போக்குவரத்து சுரங்கப்பாதைகளில் ஒன்றாகும். இது காஷ்மீர் பள்ளத்தாக்குக்கும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் இடையே ஒரு முக்கியமான ரயில் இணைப்பை உருவாக்குகிறது.
2024-ம் ஆண்டில், ஹூக்ளி நதிக்கு அடியில் எஸ்பிளனேட் மற்றும் ஹவுரா மைதானத்தை இணைக்கும் முதல் நீருக்கடியில் மெட்ரோ சுரங்கப்பாதை கொல்கத்தாவில் தொடங்கப்பட்டதன் மூலம் இந்தியா ஒரு வரலாற்று திருப்புமுனையை ஏற்படுத்தியது.
தற்போது புதிய தலைமுறை சுரங்கப்பாதைகள் வடிவம் பெறத் தயாராகி வருகின்றன. இந்த திட்டங்கள், நாட்டின் போக்குவரத்தை மறுவரையறை செய்வதை எடுத்துக்காட்டுகின்றன.
மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட இணையதள இணைப்புகளைப் பார்க்கவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2214471®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2168979®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2150293
https://www.nhidcl.com/en/blog/sonamarg-tunnel-step-towards-regional-prosperity
https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1915271
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1486325®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1589080®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1796961
https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2012962®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2146321®=3&lang=2
பிரதமர் அலுவலகம்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2092468®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1819193®=3&lang=2
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=154553&ModuleId=3®=3&lang=2
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=155002&ModuleId=3®=3&lang=2
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=154624&ModuleId=3®=6&lang=1
https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1583779®=3&lang=2
https://ladakh.gov.in/ladakh-chief-secretary-reviews-zojila-tunnel-progress-12-km-completed-project-on-track-for-2028-finish/
https://marvels.bro.gov.in/AtalTunnel
https://marvels.bro.gov.in/BROMarvels/SelaTunnel
(Release ID: 2214471)
****
AD/PLM/SH
(रिलीज़ आईडी: 2214500)
आगंतुक पटल : 12