பாதுகாப்பு அமைச்சகம்
ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் மற்றும் நிபுணர்கள் பணிக்குழுவின் 16-வது கூட்டம் புதுதில்லியில் 2026 ஜனவரி 14 -16-ல் நடைபெறவுள்ளது
प्रविष्टि तिथि:
13 JAN 2026 4:07PM by PIB Chennai
ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் மற்றும் நிபுணர்கள் பணிக்குழுவின் 16-வது கூட்டம் புதுதில்லியில் 2026 ஜனவரி 14 முதல் 16 வரை நடைபெறவுள்ளது. இந்தியா, மலேஷியா ஆகிய நாடுகள் இதற்கு இணைந்து தலைமை வகிக்கின்றன. புருனே, கம்போடியா, இந்தோனேஷியா, லாவோ பிடிஆர், மலேஷியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், வியட்நாம், சிங்கப்பூர், தாய்லாந்து, தைமூர் லெஸ்பே ஆகிய 11 ஆசிய உறுப்பு நாடுகளும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கொரியா, ஜப்பான், சீனா, அமெரிக்கா, ரஷ்யா ஆகிய 7 உரையாடல் கூட்டாண்மை நாடுகளும் பங்கேற்கின்றன.
ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் மற்றும் நடவடிக்கைகளுடன் தீவிரவாதத்தை எதிர்கொள்வது குறித்த இந்தியாவின் பலதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான 3 ஆண்டு செயல்திட்டத்தின் கீழ், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மற்றும் திட்டமிடப்பட்டுள்ள நடவடிக்கைத் துறைக்கும் முந்தைய அமர்விலிருந்து மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் மறு ஆய்வு செய்வதற்கான முக்கிய தளமாக இந்தக் கூட்டம் இருக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2214147®=3&lang=1
***
AD/IR/KPG/SH
(रिलीज़ आईडी: 2214228)
आगंतुक पटल : 8