பாதுகாப்பு அமைச்சகம்
நாட்டின் அனைத்துக் குடிமக்களுக்கும் தரமான சுகாதார சேவையை வழங்குவதில் அரசு உறுதி பூண்டுள்ளது - பாதுகாப்பு அமைச்சர்
प्रविष्टि तिथि:
13 JAN 2026 3:32PM by PIB Chennai
நாட்டின் அனைத்துக் குடிமக்களுக்கும் குறிப்பாக ஊரக மற்றும் தீவுப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தரமான சுகாதாரச் சேவையை வழங்குவதில் அரசு உறுதி பூண்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். தீவுப் பகுதிகளில் முதல் முறையாக லட்சத்தீவின் கவரட்டியில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் இந்திய கடற்படை ஏற்பாடு செய்திருந்த சுமார் ஒரு வாரகால முப்படைகளின் பன்னோக்கு சிறப்பு முகாமில் 2026 ஜனவரி 13 அன்று காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றினார். கடல்சார் பாதுகாப்புக்கு அப்பால் நாட்டைக் கட்டமைத்தல் மற்றும் மனிதநேய உறுதிகளில் இந்தியக் கடற்படையின் மகத்துவமான பங்களிப்புக்கு உதாரணமாக இந்த முன்முயற்சி திகழ்வதாக அவர் குறிப்பிட்டார். இந்த முகாம் மூலம் முப்படை மருத்துவக் குழு மேம்பட்ட நோய் கண்டறிதல் வசதிகள், சிறப்பு சிகிச்சை, கண்புரை அறுவை சிகிச்சைகள் போன்ற சேவைகளை மக்களின் வசிப்பிடத்திலேயே மேற்கொண்டதாக அவர் கூறினார்.
விரிவான பரிசோதனை, விரைவான நோய் கண்டறிதல், உரிய நேரத்தில் மருத்துவ ஆலோசனை, மருத்துவ சிகிச்சை, இலவச மருந்து விநியோகம் ஆகியவை தீவுப் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு நீண்டகால சுகாதார நலனை அளிக்கும் என்று பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2214127®=3&lang=1
***
AD/IR/KPG/SH
(रिलीज़ आईडी: 2214222)
आगंतुक पटल : 9