மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

இந்திய செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாடு 2026 குறித்த விவாதம் புதுதில்லியில் நடைபெற்றது

प्रविष्टि तिथि: 13 JAN 2026 1:08PM by PIB Chennai

டிஜிட்டல் இந்தியா நமது நிபுணர்களைக் கேளுங்கள் என்ற நிகழ்வின் 38-வது பகுதி 2026 ஜனவரி 9 அன்று புதுதில்லியில் நடைபெற்றது. இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்கம் உச்சிமாநாடு 2026-ல் நடைபெறவுள்ள நிலையில், இந்த சிறப்புமிக்க உலகளாவிய நிகழ்வு பொறுப்புடன் கூடிய எதிர்காலத்தையும் செயற்கை நுண்ணறிவு உள்ளடக்கத்தையும் வடிவமைக்கும் என்று விளக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பங்கேற்ற மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் இந்திய செயற்கை நுண்ணறிவுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு திட்டமிடல் குறித்து மக்கள், புத்தொழில் நிறுவனங்கள், மாணவர்கள் மற்றும் தொழில்துறையினர் எழுப்பிய கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளித்தனர். மக்கள், பூமி, வளர்ச்சி ஆகிய 3 வழிகாட்டு தூண்களிடையே எவ்வாறு இந்த உச்சிமாநாடு கட்டமைக்கப்படுகிறது என்பது குறித்து நிபுணர்கள் விளக்கினார்கள். இங்கு நடைபெற்ற விவாதங்கள், இந்தியா மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் செயற்கை நுண்ணறிவு கொள்கை, திறன் உத்தி மற்றும் அமல்படுத்துதல் ஆகியவற்றுக்கு காரணமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2214075&reg=3&lang=1

***

AD/IR/KPG/PD


(रिलीज़ आईडी: 2214093) आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी