வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
சட்டீஸ்கரின் ராய்ப்பூரில் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய அலுவலகம் திறக்கப்பட்டது
प्रविष्टि तिथि:
12 JAN 2026 1:33PM by PIB Chennai
வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதிகளுக்கான முக்கிய மையமாக சட்டீஸ்கரை திகழச் செய்யும் வகையில், ராய்ப்பூரில் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் மண்டல அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. சட்டீஸ்கரில் நடைபெற்ற இரண்டாவது இந்திய சர்வதேச அரிசி உச்சி மாநாட்டின்போது இது தொடங்கப்பட்டது.
இந்த மண்டல அலுவலகம் சட்டீஸ்கரின் வேளாண் பொருளாதாரத்திற்கான முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. இந்த புதிய அலுவலகம் ஏற்றுமதி பதிவு, ஆலோசனை உதவி, சந்தை நுண்ணறிவு, சான்றிதழ் உதவி, ஏற்றுமதி வசதி, உள்கட்டமைப்பு வளர்ச்சி, சந்தை வாய்ப்பு ஆதரவு போன்ற சேவைகளை அளிப்பதன் மூலம், விவசாயிகள், உற்பத்தி குழுக்கள், கூட்டுறவு மற்றும் ஏற்றுமதியாளர்கள் பயன்பெறுவார்கள்
***
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2213684®=3&lang=1
TV/IR/LDN/KR
(रिलीज़ आईडी: 2213811)
आगंतुक पटल : 7