பாதுகாப்பு அமைச்சகம்
நாட்டின் கடல்சார் பாரம்பரியத்தை, புதுதில்லி உலகப் புத்தகக் கண்காட்சியில் கடற்படை காட்சிப்படுத்தியுள்ளது
प्रविष्टि तिथि:
11 JAN 2026 5:35PM by PIB Chennai
இலக்கியம், அறிவு, பாரம்பரியம் ஆகியவற்றைக் கொண்டாடும் ஒரு முதன்மை கலாச்சார நிகழ்வான புதுதில்லி உலகப் புத்தகக் கண்காட்சி 2026-ல் இந்திய கடற்படை பங்கேற்றுள்ளது. மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான தேசிய புத்தக அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 9 நாள் புத்தக கண்காட்சியை, மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் நேற்று (10.01.2026) தொடங்கி வைத்தார்.
இதில் இந்திய கடற்படையின் பங்கேற்று அரங்கு அமைத்துள்ளது. இதில் இந்திய கடற்படையின் அதிகாரப்பூர்வ வரலாற்றின் ஏழு தொகுதிகள் (1945–2021) காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுடன் பல்வேறு இந்திய கடற்படைக் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், விமானம் தாங்கி கப்பல்கள், இந்தியாவின் கடல்சார் வரலாறு குறித்த புத்தகங்கள் ஆகியவை பார்வையாளர்களுக்கு, நாட்டின் வளமான கடல்சார் பாரம்பரியத்தைப் பற்றிய புரிதலை மேம்படுத்துகின்றன.
'கடற்படை கடல்சார் பயணங்கள்: கடந்த காலமும் நிகழ்காலமும்' என்ற தலைப்பில் ஒரு குழு விவாதம் இன்று (ஜனவரி 11, 2026) நடைபெற்றது. 'விதி அடிப்படையிலான ஒழுங்கை உருவாக்குவதில் இந்திய கடற்படையின் பங்கு' என்ற தலைப்பில் மற்றொரு குழு விவாதம் ஜனவரி 14, 2026 அன்று நடைபெற உள்ளது.
புத்தகக் கண்காட்சியின் முக்கிய சிறப்பம்சமாக, கடற்படை வரலாற்றுப் பிரிவால் தயாரிக்கப்பட்ட இந்திய கடற்படை பற்றிய புத்தகம் கடற்படைத் தளபதியால் வெளியிடப்படவுள்ளது. கடற்படையின் பெருமைமிக்க சேவை மற்றும் கடல்சார் பாரம்பரியத்தைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள, புது தில்லி உலக புத்தகக் கண்காட்சி 2026-க்கு வருகை தருமாறு அனைவரையும் கடற்படை அழைக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2213422®=3&lang=1
***
TV/PLM/RK
(रिलीज़ आईडी: 2213476)
आगंतुक पटल : 14