பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
வளர்ச்சியடைந்த பாரத இளம் தலைவர்கள் உரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் குழுவினருடன் மத்திய இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங் கலந்துரையாடினார்
प्रविष्टि तिथि:
11 JAN 2026 5:04PM by PIB Chennai
மத்திய அறிவியல், தொழில்நுட்பம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் குழுவினருடன் புதுதில்லியில் தமது இல்லத்தில் உரையாடினார். இதில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 52 இளைஞர்களும், லடாக்கைச் சேர்ந்த 31 இளைஞர்களும் அடங்குவார்கள். இவர்கள் வளர்ச்சியடைந்த பாரத இளம் தலைவர்கள் உரையாடல் 2026-ல் பங்கேற்க தில்லி வந்துள்ளனர்.
இந்த உரையாடலின் போது பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், வளர்ச்சியடைந்த பாரத இளம் தலைவர்கள் உரையாடல் என்ற தேசிய தளத்தை இளைஞர்கள் அதிகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்தியாவின் எதிர்காலம், இளைஞர்களின் ஆற்றல், புதுமை மற்றும் தலைமைத்துவத்தில்தான் உள்ளது என்று அவர் கூறினார். வளர்ச்சி அடைந்த பாரத இளம் தலைவர்கள் உரையாடல் என்பது வெறும் விழா அல்ல எனவும், மாறாக கருத்துக்கள், படைப்பாற்றல் மற்றும் தலைமைத்துவத்தை ஒன்றிணைத்து, தேசத்தைக் கட்டியெழுப்பும் தளம் என்றும் அவர் எடுத்துரைத்தார்.
ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக்கைச் சேர்ந்த இளைஞர்கள் தேசிய அளவிலான தளத்தில் தங்களது பிராந்தியங்களை சிறப்புடன் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள் என்றும், நேர்மறையான மாற்றத்தின் தூதர்களாக அவர்கள் விளங்குவார்கள் என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2213421®=3&lang=1
***
TV/PLM/RK
(रिलीज़ आईडी: 2213474)
आगंतुक पटल : 13