கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கலங்கரை விளக்க சுற்றுலா கடந்த பத்து ஆண்டுகளில் ஐந்து மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது - மத்திய அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால்

प्रविष्टि तिथि: 10 JAN 2026 9:15PM by PIB Chennai

விசாகப்பட்டினத்தில் இரண்டு நாள் நடைபெற்ற மூன்றாவது இந்திய கலங்கரை விளக்க விழா கோலாகலமாக நிறைவடைந்தது. இதில் மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் பங்கேற்றுப் பேசுகையில், விசாகப்பட்டினம் நகரம் 'இந்தியாவின் கடல்சார் பாரம்பரியம் மற்றும் கடலோர கலாச்சாரத்தின் கலங்கரை விளக்கமாக' உருவெடுத்துள்ளது என்றார்.

ஆந்திரப் பிரதேசத்தின் முதல் கலங்கரை விளக்க அருங்காட்சியகம் விசாகப்பட்டினத்தில் உருவாக்கப்படுவதாக அவர் கூறினார். இது கடல்சார் கல்வி, பாரம்பரிய பாதுகாப்பு மற்றும் சுற்றுலா மேம்பாட்டிற்கான மையமாக திகழும் என்று அவர் குறிப்பிட்டார். 75 கலங்கரை விளக்கங்கள் சுற்றுலா தலங்களாக மேம்படுத்தபலபடுவதாகவும், நாடு முழுவதும் கூடுதலாக 25 கலங்கரை விளக்கங்களை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அவர் கூறினார்.

கலங்கரை விளக்க சுற்றுலா உள்ளூர் வாழ்வாதாரங்களை உருவாக்குகிறது என்றும், கடல்சார் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது எனவும் அவர் தெரிவித்தார். கலங்கரை விளக்க சுற்றுலாவை மேம்படுத்துவதில் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு, குஜராத்தில் தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தில் 266 கோடி முதலீட்டில் 77 மீட்டர் உயர கலங்கரை விளக்க அருங்காட்சியகத்தை அமைத்து வருவதாக அவர் கூறினார்.  இந்த கலங்கரை விளக்க அருங்காட்சியகம் உலகின் மிக உயரமானதாக திகழும் என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த பத்து ஆண்டுகளில் முக்கிய கொள்கை சீர்திருத்தங்கள் மூலம் இந்தியாவின் கடல்சார் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். கலங்கரை விளக்க சுற்றுலா கடந்த பத்து ஆண்டுகளில் ஐந்து மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது என்று மத்திய அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2213361&reg=3&lang=1

***

TV/PLM/RK


(रिलीज़ आईडी: 2213382) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी