பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாதுகாப்புத் துறையில் தற்சார்பு என்பது நீண்டகால உத்திசார் தன்னாட்சிக்கு தேசிய அளவில் கட்டாயமும் அவசியமும் ஆகும்: பாதுகாப்புத் துறை செயலாளர்

प्रविष्टि तिथि: 10 JAN 2026 6:41PM by PIB Chennai

"இந்தியா தனது பாதுகாப்பு மற்றும் தொழில்துறை பயணத்தில் ஒரு தீர்க்கமான தருணத்தில் உள்ளது, இதில் தற்சார்பு தேசிய கட்டாயமாக உருவெடுத்துள்ளது," என்று 2026, ஜனவரி 10 அன்று சண்டிகரில் நடைபெற்ற பாதுகாப்பு, விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை திறன் மேம்பாடு குறித்த மாநாட்டின் தொடக்க விழாவில் பாதுகாப்புத் துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் கூறினார். கடந்த பத்தாண்டுகளில் இந்தியப்  பாதுகாப்பு தொழில்துறை சூழல் அமைப்பின் மாற்றத்தை எடுத்துக்காட்டிய அவர், தற்சார்பு இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்பட்டு, இந்தத் துறை இறக்குமதியை சார்ந்திருப்பதிலிருந்து விலகி பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் , தனியார் தொழில்கள், எம்எஸ்எம்இ-கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு துடிப்பான சூழல் அமைப்பாக மாறியுள்ளது என்றார்.

வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளும், தொடர்ச்சியான கொள்கை சீர்திருத்தங்களும் உள்நாட்டு உற்பத்தி எழுச்சியை ஊக்குவித்துள்ளன. ட்ரோன்கள் மற்றும் சென்சார்கள் முதல் பீரங்கி துப்பாக்கிகள், கவச வாகனங்கள், ஏவுகணைகள் போன்ற சிக்கலான அமைப்புகள் வரை உள்நாட்டு வடிவமைப்பையும், உற்பத்தியையும்  ஊக்குவித்துள்ளன என்று அவர் தெரிவித்தார். 462 நிறுவனங்களுக்கு 788-க்கும் அதிகமான தொழில்துறை உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன, இது தனியார் துறை பங்களிப்பை கணிசமாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் பாதுகாப்புத் தளவாட  ஏற்றுமதிகள் 2025-ல் ரூ.23,162 கோடியைக் கடந்துள்ளது. இது 2014-க்குப் பின்  சுமார் 35 மடங்கு அதிகரிப்பைக் காட்டுகிறது.

மத்திய அரசின் 50 சதவீத நிதி உட்பட ஐந்து ஆண்டுகளில் மொத்தம் ரூ.60,000 கோடி செலவில், சிறப்பு மையங்களை நிறுவுதல், இரட்டைப் பயிற்சிகளை ஊக்குவித்தல், செயற்கை நுண்ணறிவால் இயக்கப்பட்ட பயிற்சிக் கருவிகளை அறிமுகம் செய்தல், அக்னிவீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களைக்  கட்டமைக்கப்பட்ட திறன் பாதைகளில் ஒருங்கிணைத்தல் ஆகியவற்றை பிஎம்-சேது நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த மாநாட்டை பஞ்சாப் அரசு, இந்திய பாதுகாப்புத் தளவாட  உற்பத்தியாளர்கள் சங்கம், இந்தியத்  தொழில்கள் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. தொழில்துறை தலைவர்கள், மூத்த அதிகாரிகள், கல்வித்துறை பிரதிநிதிகள் மற்றும் ஆயுதப்படையினர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2213288&reg=3&lang=2

****

TV/SMB/SH


(रिलीज़ आईडी: 2213316) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी