புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
தூய்மை எரிசக்தியில், 2025-ம் ஆண்டில் இந்தியா சாதனை படைத்துள்ளது: மத்திய அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி
2025-ம் ஆண்டில் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் 22.6% உயர்ந்து 266.78 ஜிகா வாட்டாக அதிகரித்தது - திரு பிரல்ஹாத் ஜோஷி
प्रविष्टि तिथि:
10 JAN 2026 4:39PM by PIB Chennai
2025-ம் ஆண்டில், இந்தியா தனது தூய்மை எரிசக்தி பயணத்தில் சாதனை படைத்த ஆண்டாக அமைந்த்து என மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி கூறியுள்ளார். சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். புதைபடிவமற்ற எரிசக்தித் திறன் 266.78 ஜிகாவாட்டாக உயர்ந்துள்ளது என்றும் இது 2024 ஆம் ஆண்டை விட 22.6 சதவீதம் அதிகம் என்றும் அவர் கூறியுள்ளார்.
சூரிய சக்தி மின் திறன் 2024-ல் 97.86 ஜிகாவாட்டாக இருந்தது எனவும் 2025-ல் இது 135.81 ஜிகா வாட்டாக அதிகரித்து, 38.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். காற்றாலை மின் திறனும் நிலையான வளர்ச்சியைக் கண்டு 48.16 ஜிகாவாட்டிலிருந்து 54.51 ஜிகாவாட்டாக உயர்ந்து, 13.2 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
2025-ம் ஆண்டில் இத்துறையில் எட்டப்பட்ட சாதனை வளர்ச்சிக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையிலான தொலைநோக்கு செயல்பாடுகளே காரணம் என்று மத்திய அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி கூறியுள்ளார். நாடு முழுவதும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை மேலும் விரைவுபடுத்துவதற்காக, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் மாநிலங்களுடன் தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
(Release ID: 2213238)
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2213263)
आगंतुक पटल : 17