PIB Headquarters
இந்தியா - ஓமன் இடையே விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம்: ஒரு பார்வை
प्रविष्टि तिथि:
10 JAN 2026 2:52PM by PIB Chennai
விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் கீழ், ஓமனுக்கான தனது ஏற்றுமதிகளுக்கு 100 சதவீத வரியில்லா சந்தை அணுகலை இந்தியா பெறுகிறது. இது ஓமனின் கட்டண விதிகளில் 98.08 சதவீதத்தை உள்ளடக்கியது. மேலும் 2022–23-க்கான சராசரியை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவின் வர்த்தக மதிப்பில் 99.38 சதவீதத்தைக் கொண்டுள்ளது. அனைத்து பூஜ்ஜிய வரி சலுகைகளும் ஒப்பந்தம் அமலுக்கு வந்த முதல் நாளிலிருந்து பொருந்தும். இது ஏற்றுமதியாளர்களுக்கு உடனடி உறுதிப்பாட்டை வழங்குகிறது.
தற்போது, இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பில் 15.33 சதவீதமும், கட்டண விதிகளில் 11.34 சதவீதமும் (2022–24 சராசரி) மட்டுமே மிகவும் விரும்பப்படும் நாடு அதிகாரத்தின் கீழ் பூஜ்ஜிய வரியுடன் ஓமன் சந்தையில் நுழைகின்றன. ஏற்கனவே 5 சதவீதம் வரை வரிகளை எதிர்கொண்ட, சுமார் 3.64 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள, ஓமனுக்கான இந்திய ஏற்றுமதிகள், விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் காரணமாக , மேம்பட்ட விலை போட்டித்தன்மை மூலம் கணிசமாக லாபம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தம், கனிமங்கள், ரசாயனங்கள், அடிப்படை உலோகங்கள், இயந்திரங்கள், பிளாஸ்டிக் மற்றும் ரப்பர், போக்குவரத்து மற்றும் வாகன பொருட்கள், கருவிகள், கடிகாரங்கள், கண்ணாடி, செராமிக், பளிங்கு, காகிதம், ஜவுளி, விவசாயம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள், கடல் பொருட்கள், ரத்தினங்கள் மற்றும் நகைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏற்றுமதி வாய்ப்புகளை வழங்குகிறது.
இந்தியாவின் பொறியியல் பொருட்கள் ஏற்றுமதிக்கு ஓமன் ஒரு முக்கிய இடமாகும். இது 2024–25 நிதியாண்டில் 875.83 மில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது, இதில் இயந்திரங்கள், மின் உபகரணங்கள், மோட்டார் வாகனங்கள், இரும்பு, எஃகு மற்றும் இரும்பு அல்லாத உலோகங்கள் அடங்கும்.
2024-ல் ஓமனின் மருந்துச் சந்தை மதிப்பு 302.84 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது 2031-ல் 473.71 மில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 6.6 சதவீத கூட்டான வருடாந்தர வளர்ச்சி விகிதத்தில் அதிகரிக்கும். சந்தை இறக்குமதியைப் பெரிதும் சார்ந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2213203®=3&lang=2
****
TV/SMB/SH
(रिलीज़ आईडी: 2213250)
आगंतुक पटल : 14