கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
தமிழகத்தில் ரூ.235 கோடி மதிப்பிலான துறைமுகத் திட்டங்கள்: மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் தொடங்கி வைத்தார்
प्रविष्टि तिथि:
08 JAN 2026 8:21PM by PIB Chennai
சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்களில் ரூ 235 கோடி மதிப்பிலான உட்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் ஆளுகைத் திட்டங்களை மத்தியத் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்த சோனோவால் தொடங்கி வைத்தார்.
சென்னையில் நடைபெற்ற வளர்ச்சியடைந்த பாரதம், வளர்ச்சியடைந்த துறைமுகங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், இத்திட்டங்கள் தமிழகத்தின் கடல்சார் திறனை வலுப்படுத்தும் என்றார்.
முக்கியத் திட்டங்கள்:
சென்னை துறைமுகத்தில் ரூ.33.28 கோடியில் கடற்கரை பாதுகாப்புச் சுவர் வலுப்படுத்துதல், ரூ.43 கோடியில் புதிய தீயணைப்பு பம்ப் ஹவுஸ் மற்றும் ரூ.8.08 கோடியில் துறைமுக மருத்துவமனை நவீனமயமாக்கல் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும், துறைமுக செயல்பாடுகளை ஒருங்கிணைக்க ரூ.45 கோடியில் உருவாக்கப்பட்ட 'EBS' டிஜிட்டல் தளத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.
காமராஜர் துறைமுகத்தில் புயலால் சேதமடைந்த வடக்கு அலைதாங்கியை ரூ.I05 கோடியில் சீரமைக்கும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார். இது பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்யும்.
மேலும், நாடு முழுவதும் ஒரே மாதிரியான துறைமுக நடைமுறைகளை உருவாக்க 'இ-போர்ட் கிளியரன்ஸ்' இணையதளத்தையும் அவர் அறிமுகப்படுத்தினார். 'வந்தே மாதரம் @150' கொண்டாட்டங்களுக்கு இடையே நடைபெற்ற இந்நிகழ்வில், சென்னை துறைமுகப் பள்ளி மாணவர்களின் பாய்மரப் படகு பயிற்சிக்கு ரூ.18 லட்சத்திற்கான காசோலையையும் அமைச்சர் வழங்கினார். முன்னதாக, தண்டையார்பேட்டையில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான 'சுவாபோதினி' மையத்தைப் பார்வையிட்டு அவர்களுடன் கலந்துரையாடினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2212621®=3&lang=1
செய்தி வெளியீட்டு எண் 2212621
****
TV/VK/SH
(रिलीज़ आईडी: 2212672)
आगंतुक पटल : 19