பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
மகளிருக்கேற்ற முன்மாதிரி கிராம ஊராட்சிகளுக்கான தேசியப் பயிலரங்கம் புனேவில் தொடக்கம்
प्रविष्टि तिथि:
08 JAN 2026 5:42PM by PIB Chennai
இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் 'பெண்கள் நட்பு முன்மாதிரி கிராம ஊராட்சிகளை' உருவாக்கும் நோக்கில், மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள இரண்டு நாள் தேசியப் பயிலரங்கம் புனேவில் உள்ள யஷ்வந்த்ராவ் சவான் அகாடமியில் தொடங்கியது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு உட்பட 13 மாநிலங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இதில் பங்கேற்றுள்ளனர்.
நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு. சுஷில் குமார் லோஹானி, மகளிர்க்கேற்ற ஆட்சியை உருவாக்க நிதியாதாரங்களை விட சமூக விழிப்புணர்வும், மாற்றமுமே மிக அவசியம். பினாமி தலைமை முறையை (Proxy leadership) ஒழித்து, குடிநீர், கழிப்பறை வசதி மற்றும் கிராம அளவிலான அனைத்து நடவடிக்கைகளிலும் பெண்களின் சமமான பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும்," என்றார். மேலும், பாலின உணர்வுடன் கூடிய திட்டமிடலை வலுப்படுத்த அமைச்சகம் முன்னுரிமை அளிப்பதாகக் குறிப்பிட்டார்.
மகாராஷ்டிராவின் ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் திரு. ஏக்நாத் தவாலே பேசுகையில், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள 50 சதவீத இட ஒதுக்கீடு, அவர்களின் பொருளாதாரச் சுதந்திரம் மற்றும் முடிவெடுக்கும் அதிகாரமாக மாற வேண்டும் என்றார்.
மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் இயக்குநர் திரு. விபுல் உஜ்வல், பெண்களின் ஆரோக்கியம், கல்வி, திறன் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை விளக்கினார். ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின் (UNFPA) பிரதிநிதி டாக்டர் தீபா பிரசாத், நிலையான வளர்ச்சி இலக்குகளை எட்டத் தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்துப் பேசினார். சிறந்த முறையில் செயல்படும் மாதிரி கிராம ஊராட்சிகளின் பிரதிநிதிகள், பெண்களைத் திட்டமிடல் மற்றும் பட்ஜெட்டில் எவ்வாறு ஈடுபடுத்துவது என்பது குறித்த தங்களது கள அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2212542®=1&lang=1
செய்தி வெளியீட்டு எண் 2212542
****
TV/VK/SH
(रिलीज़ आईडी: 2212627)
आगंतुक पटल : 16