தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விவசாயத் தரக்கட்டுப்பாட்டை வலுப்படுத்த அஞ்சல் துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்: போலி இடுபொருட்களுக்கு முற்றுப்புள்ளி!

प्रविष्टि तिथि: 07 JAN 2026 7:10PM by PIB Chennai

மத்திய வேளாண் அமைச்சகமும், இந்திய அஞ்சல் துறையும் இணைந்து விவசாயிகளுக்குத் தரமான இடுபொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. மத்திய அமைச்சர்கள் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் ஜோதிராதித்ய சிந்தியா முன்னிலையில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்தத் திட்டத்தின்படி, நாடு முழுவதும் உள்ள சுமார் 1.60 லட்சம் அஞ்சல் நிலையங்களின் வலுவான வலையமைப்பைப் பயன்படுத்தி, பூச்சிக்கொல்லிகள், விதைகள் மற்றும் உரங்களின் மாதிரிகள் சேகரிக்கப்படும். இவை அஞ்சல் துறை மூலம் மின்னல் வேகத்தில் உரிய ஆய்வுக்கூடங்களுக்குக் கொண்டு சேர்க்கப்படும். இதற்காக CRISP அமைப்பு ஒரு பிரத்யேக ஆன்லைன் தர மேலாண்மை முறையை உருவாக்கியுள்ளது.

முன்பு 15 நாட்கள் வரை எடுத்துக்கொண்ட இந்தச் செயல்முறை, இனி 48 முதல் 72 மணி நேரத்திற்குள் முடிக்கப்படும். பாதுகாப்பை உறுதி செய்ய க்யூஆர் கோட் (QR Code) மற்றும் டிஜிட்டல் கண்காணிப்பு முறைகள் பயன்படுத்தப்படும். இதன் மூலம் முகவரி விவரங்கள் மறைக்கப்பட்டு, சோதனையில் எவ்விதத் தலையீடும் இல்லாமல் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும்.

இந்த அதிரடி மாற்றத்தால், சந்தையில் புழங்கும் போலி மற்றும் தரமற்ற இடுபொருட்கள் கண்டறியப்பட்டு அவை விவசாயிகளைச் சென்றடைவது தடுக்கப்படும். அஞ்சல் துறையின் கடைக்கோடி இணைப்பு வசதி மூலம், கடைகோடி கிராமத்தின் விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும். இது 2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய தரமான விவசாய உற்பத்தியை உறுதி செய்யும் ஒரு முக்கிய நடவடிக்கையாகும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2212181&reg=3&lang=1

செய்தி வெளியீட்டு எண்: 2212181

****

TV/VK/SH


(रिलीज़ आईडी: 2212278) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu