தேர்தல் ஆணையம்
ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை குறித்த சர்வதேச மாநாடு புதுதில்லியில் நடைபெற உள்ளது
प्रविष्टि तिथि:
07 JAN 2026 5:09PM by PIB Chennai
ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை குறித்த சர்வதேச மாநாடு 2026-ஐ தேர்தல் ஆணையம் 2026 ஜனவரி 21 முதல் 23-ம் தேதி வரை புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடத்தவுள்ளது. இந்த 3 நாள் சர்வதேச மாநாட்டுக்கு தேர்தல் ஆணையத்தின் இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இம்மாநாட்டில் தேர்தல் மேலாண்மை அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 100 சர்வதேச பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
இந்த மாநாடு குறித்து இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை நிறுவன தலைமை இயக்குநர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தேர்தல் மேலாண்மை அமைப்புகளிடையே சர்வதேச ஒத்துழைப்புக்கான உலகளாவிய தளமாக இந்த மாநாடு விளங்கும் என்று அவர் கூறினார். தேர்தல் ஆணையர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சாந்து, டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோருடன் இணைந்து தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ் குமார் தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் உயர் அதிகாரிகள் மற்றும் இதர சர்வதேச பிரதிநிதிகளுடன் 40-க்கும் அதிகமான இருதரப்புக் கூட்டங்களில் பங்கேற்க உள்ளார். 4 ஐஐடி, 6 ஐஐஎம் உள்ளிட்ட முன்னணி கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இம்மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2212120®=3&lang=1
****
TV/IR/SH
(रिलीज़ आईडी: 2212247)
आगंतुक पटल : 19