சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

9வது சித்த மருத்துவ தினத்தன்று

இலவச சிறப்பு சித்த மருத்துவ முகாம் & விழிப்புணர்வு நடைப்பயணம்

प्रविष्टि तिथि: 06 JAN 2026 9:22PM by PIB Chennai

 

ஒன்பதாவது சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் இலவச மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு நடை பயணம் நடைபெற்றது    .இந்நிகழ்ச்சியை மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் இயக்குனர் N. J. முத்துக்குமார் தொடங்கி வைத்தார்.  இதில் சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரிவோர் மற்றும் சென்னை அரசு சித்த மருத்துவ கல்லூரி மாணவர்களும், மருத்துவர்களும் கலந்து கொண்டனர். இலவச மருத்துவ முகாம் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது. முகாமில் 500 பொது மக்கள் பயன்பெற்றனர் இந்த இலவச மருத்துவ முகாமில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், போன்ற நோய்களுக்கு சித்த வாழ்வியல் முறைகளை மருத்துவர்கள் அறிவுருத்தினர். மேலும் இலவச இரத்த பரிசோதனை, இசிஜி, இரத்த கொழுப்பு பரிசோதனை, இரத்த அணுக்கள் பரிசோதனை ஆகியவை இலவசமாக மேற்கொள்ளப்பட்டது. மேலும் இம்முகாமில் அனைத்து பொது மக்களுக்கு மூலிகை கன்றுகள் வழங்கப்பட்டு அதனை பயன்படுத்தும் எளிய வீட்டுமுறையையும் அறிவுருத்தப்பட்டது. மேலும் பல்வேறு நோய்களுக்கும் இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. இவ்விழாவில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை இணை இயக்குனர் கோமளவல்லி, சென்னை அரசு சித்த மருத்துவ கல்லூரி முதல்வர் வெங்கடப்பன், சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குனர் கனகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

****

TV/BR/SH


(रिलीज़ आईडी: 2211938) आगंतुक पटल : 26
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English