ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சரஸ்-2026 கண்காட்சி ஆந்திரப்பிரதேச மாநிலம் குண்டூரில் 2026 ஜனவரி 8 அன்று தொடங்குகிறது

प्रविष्टि तिथि: 06 JAN 2026 4:39PM by PIB Chennai

சரஸ்-2026 (கிராமப்புற கைவினைஞர்கள் சங்கத்தின் பொருட்கள் விற்பனை) திருவிழா ஆந்திரப்பிரதேச மாநிலம் குண்டூரில் 2026 ஜனவரி 6 முதல் 18 வரை நடைபெறும் என்று மத்திய ஊரக மேம்பாடு மற்றும் தகவல் தொடர்புத்துறை இணையமைச்சர் டாக்டர் பெம்மசானி சந்திர சேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்கள் தங்களுடைய கைவினைத்திறன் மற்றும் தொழில்முனைவு உத்வேகத்தை எடுத்துக்காட்டும் வகையில் ஒன்றிணைவதற்கான நிகழ்வாகும் என்று அவர் கூறினார்.

ஆந்திரப் பிரதேசத்தின் ஊரகப்பகுதிகளில் உள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டிற்கான முக்கிய தளமாக இக்கண்காட்சி விளங்கும் என்று அவர் தெரிவித்தார். தேசிய மற்றும் சர்வதேச தளங்களைப் புரிந்து கொள்ளவும், புதிய தயாரிப்புக்கான சாத்தியக்கூறுகளை கண்டறியவும், தங்களுடைய வர்த்தகத்தை அதிகரிப்பதற்காக நவீன சந்தை உத்திகளை கற்றுக்கொள்ளவும், உள்ளூர் சுய உதவிக் குழுக்களுக்கு இது தனித்துவமான வாய்ப்பு என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கண்காட்சியில் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 300 கைவினைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் பங்கேற்பார்கள்.       

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2211773&reg=3&lang=1

***

AD/IR/RJ/SH


(रिलीज़ आईडी: 2211834) आगंतुक पटल : 19
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी