PIB Headquarters
azadi ka amrit mahotsav

தொட்டுணரக்கூடிய வெற்றி - இந்தியாவில் பிரெய்லி உரிமைகளும் அனைவரையும் உள்ளடக்கிய தன்மையும்

प्रविष्टि तिथि: 04 JAN 2026 11:56AM by PIB Chennai

உலக பிரெய்லி தினம், ஆண்டுதோறும் ஜனவரி 4-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. 2016-ம் ஆண்டு இந்தியாவில் நிறைவேற்றப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தில், அனைவரையும் உள்ளடக்கிய கொள்கை சூழல் அமைப்பு, கல்வி சீர்திருத்தங்கள், உதவித் திட்டங்கள், டிஜிட்டல் தளங்கள் ஆகியவை மூலம் பிரெய்லி அணுகலை சீராக விரிவுபடுத்தியுள்ளது. சுகம்ய பாரத் இயக்கம், புதிய தேசிய கல்விக் கொள்கை 2020, போன்ற அரசின் முயற்சிகள் மாற்றுத் திறனாளிகள் நலனில் இந்தியாவின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகின்றன.

உலக பிரெய்லி தினம், பிரெய்லியை வெறும் வாசிப்பு முறையாக மட்டுமல்லாமல், பார்வை குறைபாடுகள் உள்ளவர்களுக்கு கல்வி, கண்ணியம் சமமான பங்கேற்புக்கான நுழைவாயிலாகவும் உள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய கற்றலுக்காக பிரெய்லியை தரப்படுத்துவதற்கான இந்தியா முக்கிய முயற்சிகளை எடுத்துள்ளது. பிரெய்லி எழுத்து வடிவம் 1887-ம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், 1951-ம் ஆண்டில், பாரதி பிரெய்லி என்ற தேசிய தரநிலை, இந்திய மொழிகளுக்கான பொதுவான குறியீடுகளுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 50,32,463 பார்வைக் குறைபாடுள்ள நபர்கள் உள்ளனர். அவர்கள் சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றை அணுகுவதில் தடைகளை எதிர்கொள்கின்றனர். இவர்களது தேவைகளை அங்கீகரித்து, இந்தியாவில் பிரெய்லி, 2016-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டம் போன்ற முன்முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த முயற்சிகள் பிரெய்லியை ஒரு எழுத்தறிவு கருவியாகவும், பொது அணுகல் செயல்பாடாகவும் நிலைநிறுத்தியுள்ளன.

பிரெய்லி என்பது பார்வையற்றவர்கள் அல்லது பார்வைக் குறைபாடு உள்ளவர்களால் பயன்படுத்தப்படும் தொட்டுணரக்கூடிய எழுத்து, வாசிப்பு முறையாகும். இது ஆறு புள்ளிகள் கொண்ட கலத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒவ்வொன்றும் மூன்று புள்ளிகள் கொண்ட இரண்டு நெடுவரிசைகளில் அமைக்கப்பட்டிருக்கும்.

பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு எழுத்தறிவு, சுதந்திரம், அதிகாரமளிப்பதை உறுதி செய்வதில் பிரெய்லி முக்கிய பங்கு வகிக்கிறது. உள்ளடக்கிய கல்வி, சமூக - பொருளாதார வாழ்வில் சமமான பங்கேற்பு ஆகியவற்றுக்கு இது முக்கிய பங்கு வகிக்கிறது.

பார்வைக் குறைபாடுள்ள நபர்களுக்கு அதிகாரமளிப்பதில் ஒரு முக்கிய கருவியாக பிரெய்லியை மேம்படுத்திப் பரப்புதல், பயன்பாட்டை ஊக்குவித்தல் ஆகியவற்றுக்காக மத்திய அரசு விரிவான கட்டமைப்பை நிறுவியுள்ளது.

பாரதி பிரெய்லி என்பது பெரும்பாலான இந்திய மொழிகளில் பயன்படுத்தப்படும் தரப்படுத்தப்பட்ட தொட்டுணரக்கூடிய எழுத்து முறையாகும். இது பார்வைக் குறைபாடுள்ளவர்கள் இந்திய மொழிகளில் பிரெய்லி முறையைக் கற்றுக் கொள்ளவும் பயன்படுத்தவும் உறுதி செய்கிறது.

பார்வைக் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான அரசின் முயற்சிகளில் பிரெய்லி ஒரு முக்கிய இடம் பெற்றுள்ளது. இது சமத்துவம், பங்கேற்பு, கண்ணியம் ஆகியவற்றுக்கான ஒரு முக்கிய பாலமாகவும் உள்ளது.

மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட இணையதள இணைப்புகளைப் பார்க்கவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2211217&reg=3&lang=1

https://www.indiacode.nic.in/bitstream/123456789/15939/1/the_rights_of_persons_with_disabilities_act%2C_2016.pdf

https://cdnbbsr.s3waas.gov.in/s36ee69d3769e832ec77c9584e0b7ba112/uploads/2024/12/20241213710399415.pdf

https://cdnbbsr.s3waas.gov.in/s36ee69d3769e832ec77c9584e0b7ba112/uploads/2024/12/20241213710399415.pdf

https://rehabcouncil.nic.in/objectives/   

https://cdnbbsr.s3waas.gov.in/s36ee69d3769e832ec77c9584e0b7ba112/uploads/2025/01/20250104954295710.pdf

https://cdnbbsr.s3waas.gov.in/s36ee69d3769e832ec77c9584e0b7ba112/uploads/2024/12/202412131431869544.pdf

https://www.ugc.gov.in/pdfnews/8572354_Final-Accessibility-Guidelines.pdf

https://www.education.gov.in/sites/upload_files/mhrd/files/NEP_Final_English_0.pdf

https://social.desa.un.org/issues/disability/news/shaping-a-future-where-everyone-is-included

https://www.un.org/en/observances/world-braille-day

https://www.un.org/en/observances/braille-day/background

https://x.com/OfficialDMRC/status/1182246500283244545

***

AD/PLM/RK


(रिलीज़ आईडी: 2211246) आगंतुक पटल : 21
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati