சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
ஹரியானாவின் நுவா மாவட்டத்தில் பிரம்மாண்டமான அமலாக்க சோதனை நடத்தப்பட்டது
प्रविष्टि तिथि:
03 JAN 2026 6:30PM by PIB Chennai
தேசிய தலைநகர் பிராந்தியத்தில் சட்டப்பூர்வ வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட சுற்றுச்சூழல் விதிமுறைகள் கண்டிப்பாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்கான தொடர்ச்சியான அமலாக்க சோதனையின் ஒரு பகுதியாக, தேசிய தலைநகர் பிராந்தியம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கான காற்று தர மேலாண்மை ஆணையம், 02.01.2026 அன்று ஹரியானாவின் நுவா மாவட்டத்தில் ஒரு பெரிய ஆய்வு நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த நடவடிக்கைக்காக ஆணையத்தின் மொத்தம் 10 பறக்கும் படை குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
இந்த அமலாக்க சோதனை, மாவட்டத்தின் இணக்கமான மற்றும் இணக்கமற்ற தொழில்துறைப் பகுதிகள் இரண்டிலும் நடத்தப்பட்டது. இந்த ஆய்வுக்கு மாவட்ட நிர்வாகம், துணை ஆணையர்கள் உட்பட, ஹரியானா மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரிகளுடன் இணைந்து தலைமை தாங்கியது. ஆய்வின் போது ஆதரவளித்து, பணிகள் சீராக நடைபெறுவதை எளிதாக்குவதற்காக காவல்துறையினரும் உடனிருந்தனர். ஆய்வுப் பகுதிகள் மாவட்ட நிர்வாகத்தால் பறக்கும் படைக் குழுக்களுக்கு ஒதுக்கப்பட்டன.
மொத்தம் 105 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன; இதில் ஐந்து கட்டுமான மற்றும் இடிப்பு தளங்களும், மீதமுள்ள 100 தொழில்துறை அலகுகளும் அடங்கும். ஆய்வு செய்யப்பட்ட தொழில்களில் 86 கல் நொறுக்கும் ஆலைகள், 5 டயர் பைரோலிசிஸ் ஆலைகள், 5 ரெடி மிக்ஸ் கான்கிரீட் ஆலைகள், 3 ஹாட் மிக்ஸ் ஆலைகள், ஒரு சல்லடை மற்றும் கழுவும் ஆலை ஆகியவை அடங்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2211117®=3&lang=1
****
AD/PKV/SH
(रिलीज़ आईडी: 2211177)
आगंतुक पटल : 10