பாதுகாப்பு அமைச்சகம்
ஐஸ்டென்ட் சாதனத்தின் உதவியுடன் இந்தியாவின் முதலாவது முப்பரிமாண நீரிய ஆஞ்சியோ கிராபி ராணுவ மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்டது
प्रविष्टि तिथि:
31 DEC 2025 11:09AM by PIB Chennai
தில்லி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கண் பரிசோதனை துறையில் இந்தியாவில் முதல் முறையாக ஐஸ்டென்ட் சாதனத்தின் உதவியுடன் முப்பரிமாண நீரிய ஆஞ்சியோ கிராபி பரிசோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இது கண்ணின் குளுக்கோமா அறுவை சிகிச்சைக்கான நவீன முறையாகும்.
குளுக்கோமா என்பது மீண்டும் பெற முடியாத பார்வை இழப்புக்கு வழிவகுக்கிறது. இது கண் சார்ந்த மருத்துவத்தில் மிகப்பெரிய சவாலாக உள்ளது. இந்நிலையில், குளுக்கோமா பாதிப்பை போக்க துல்லியமான நிர்ணயிக்கப்பட்ட இலக்குடன் நோயாளிக்கு குறிப்பிடத்தக்க பார்வை மேம்பாட்டிற்கு இந்த சிகிச்சை முறை முன் எப்போதும் இல்லாத வகையில் உதவி செய்கிறது.
இந்த சிகிச்சை முறை மருத்துவத்துறையில் ஒரு மைல் கல்லாக இருப்பது மட்டுமின்றி கண்பார்வையை பாதுகாப்பதில் உத்தி சார்ந்த பாய்ச்சலையும், ஆயுதப்படைகள் சமூகத்திற்கு வழங்குகிறது..
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2209996®=3&lang=1
***
TV/SMB/RK/KR
(रिलीज़ आईडी: 2210241)
आगंतुक पटल : 6