பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

15-வது நிதிக் குழுவின் கீழ் ராஜஸ்தான் மற்றும் ஜார்கண்டில் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு ரூ. 723 கோடிக்கு மேல் நிதி விடுவிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 26 DEC 2025 3:21PM by PIB Chennai

ராஜஸ்தான் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் உள்ள பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தும் நோக்கில், மத்திய அரசு 2025-26 நிதியாண்டிற்கான பதினைந்தாவது நிதிக் குழு  மானியங்களை விடுவித்துள்ளது. ராஜஸ்தானில், 2025-26 நிதியாண்டிற்கான நிபந்தனையற்ற மானியங்களின் முதல் தவணையாக ரூ. 303.0419 கோடி, அம்மாநிலத்தின் தகுதியுள்ள 24 மாவட்ட பஞ்சாயத்துகள், 339 வட்டார பஞ்சாயத்துகள் மற்றும் 3,857 கிராம பஞ்சாயத்துகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2024-25 நிதியாண்டிற்கான மானியங்களின் முதல் மற்றும் இரண்டாவது தவணைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரூ.145.24 கோடி தொகையும், ராஜஸ்தானில் கூடுதலாகத் தகுதியுள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தைப் பொறுத்தவரை, மத்திய அரசு 2024-25 நிதியாண்டிற்கான  மானியங்களின் முதல் தவணையாக ரூ. 275.1253 கோடியை, அம்மாநிலத்தில் உள்ள தகுதியுள்ள 24 மாவட்ட பஞ்சாயத்துகள், 253 வட்டார பஞ்சாயத்துகள் மற்றும் 4,342 கிராம பஞ்சாயத்துகள் அனைத்திற்கும் விடுவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2208817&reg=3&lang=1               

***

AD/PKV/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2208988) வருகையாளர் எண்ணிக்கை : 47
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी