PIB Headquarters
azadi ka amrit mahotsav

கிராமங்களிலிருந்து தொலைநோக்குப் பார்வை

प्रविष्टि तिथि: 24 DEC 2025 3:55PM by PIB Chennai

மத்தியப் பிரதேசத்தின் குனா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபுரா கிராமத்தில் , திருமதி சரிதா சைனி, உள்ளூர் சந்தைகளில் உடனடி விற்பனைக்காக மட்டுமல்லாமல், காயவைத்து சேமிப்பதற்காகவும் காய்கறிகளைப் பிரிக்கிறார். இது, சாகுபடி நடவடிக்கைகள் குறைவாக உள்ள காலங்களிலும் தனது விளைபொருட்களை சந்தைப்படுத்த அவருக்கு உதவுகிறது. மத்தியப் பிரதேச மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் செயல்படுத்திய திட்டத்தில் அவர் இணைந்தது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறித்தது. நிறுவன ஆதரவு, திறன் மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் மூலம், அவருக்கு ரூ. 1 லட்சம் மதிப்புள்ள சூரிய சக்தி உலர்த்தி கிடைத்தது. தற்போது, அவர் வணிக ரீதியான காய்கறி சாகுபடியை சூரிய சக்தி உலர்த்தலுடன் ஆண்டு முழுவதும் சந்தை அணுகலை உறுதிசெய்து, மாதம் தோறும் சுமார் ரூ. 20,000 நிலையான வருமானத்தை ஈட்டுகிறார்.

தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம்  உலகின் மிகப்பெரிய வாழ்வாதார முயற்சிகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இது 10 கோடிக்கும் மேற்பட்ட கிராமப்புறக் குடும்பங்களை சுயஉதவிக் குழுக்களாகத் திரட்டி, நிறுவன நிதி அணுகலுடன் தொடர்ச்சியான ஆதரவையும் வழங்கி வருகிறது. டிசம்பர் 24 நிலவரப்படி,  இத்திட்டத்தின் கீழ் 10.29 கோடிக்கும் மேற்பட்ட கிராமப்புறக் குடும்பங்கள் சுய உதவிக் குழுக்களாகத் திரட்டப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2208112&reg=3&lang=1


(रिलीज़ आईडी: 2208305) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी