வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்தியாவின் தரச் சூழல் அமைப்பை வலுப்படுத்த ஏதுவாக அடுத்த தலைமுறைக்கான சீர்திருத்த நடவடிக்கைகளை இந்தியத் தரக்கட்டுப்பாட்டு குழுமம் அறிவித்துள்ளது
प्रविष्टि तिथि:
24 DEC 2025 5:03PM by PIB Chennai
இந்தியாவின் தரச் சூழல் அமைப்பை வலுப்படுத்துவதற்கும், வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்லும் வகையிலும், அடுத்த தலைமுறைக்கான சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்த விரிவான தொகுப்பை இந்தியத் தரக்கட்டுப்பாட்டுக் கவுன்சில் இன்று அறிவித்துள்ளது.
நல் ஆளுகை தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை, திரு அடல் பிஹாரி வாஜ்பாயின் பாரம்பரியம், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயலின் வழிகாட்டுதலின் கீழ், இத்தகைய சீர்திருத்த நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுகின்றன.
சுகாதாரம், ஆய்வகங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், உற்பத்தி போன்ற துறைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தரச் சூழல் அமைப்புக்கு வலுவூட்டும் அமைப்பு ரீதியான சீர்திருத்த நடவடிக்கைகளில், நாட்டின் உரிமை என்ற தர முத்திரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஆய்வகம், மருத்துவமனை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் குறித்து மக்கள் அறிந்து கொள்ள உதவிடும். மேலும் முழுமையான விபரங்களை உறுதிசெய்து, போலிச் சான்றிதழ்களை நீக்க வகை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறைவான ஆவணங்கள், குறைந்த காலக்கெடு, குறைவான ஆய்வுகள் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்த சூழல் அமைப்பு மூலம் மாற்றத்தை உருவாக்குவதற்கு இந்த சீர்திருத்தங்கள் உதவிடும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2208140®=3&lang=1
***
TV/SV/SE
(रिलीज़ आईडी: 2208270)
आगंतुक पटल : 7